/tamil-ie/media/media_files/uploads/2019/11/Pandian-Stores-Mullai-Kathir.jpg)
vijaytv serial pandian stores kathir mullai
Vijay TV Pandian Stores Serial: சீரியல்களில் ஜோடியாக நடித்து, நிஜ வாழ்க்கையிலும் இணைந்த பல பிரபலங்கள் இருக்கிறார்கள். சேத்தன் - தேவதர்ஷினி, செந்தில் - ஸ்ரீஜா, தினேஷ் - ரச்சிதா, சஞ்சீவ் - ஆல்யா மானசா என சீரியலில் இருந்து உருவான நிஜ ஜோடிகளின் பட்டியல் நீள்கிறது.
இதற்கிடையே ஆன் ஸ்கிரீனில் பயங்கர கெமிஸ்ட்ரி மிகுந்த ஜோடிகளாகவும், ஆஃப் ஸ்கிரீனில் பாம்பும் கீரியுமாகவும் சிலர் இருக்கவே செய்கிறார்கள். இந்த பட்டியலில், தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜோடி குமரனும் சித்ராவும் இணைந்திருக்கிறார்கள். காரணம் என்னவென்று விசாரித்த போது, ”யூடியூப் சேனல் ஒன்று சமீபத்தில் தமிழ் சினிமா, டி.வி கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தது.
அதில்`சிறந்த சீரியல் ஜோடி'க்கான நாமினேஷனில் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சித்ரா - குமரன் ஜோடியும் இடம் பெற்றிருக்கிறார்கள். ரசிகர்களிடம் இந்த ஜோடிக்கு அதிக ஓட்டும் கிடைத்துள்ளது. விருது கமிட்டியில் இருந்து குமரனிடம் இந்த தகவல் தெரிவிக்கப்பட, ’எனக்குத் தனியா விருது கொடுத்தா வாங்கிக்கிறேன். ஜோடியான்னா, எனக்கு அந்த விருது வேண்டாம்' என மறுத்து விட்டாராம். அவரை சமாதானப்படுத்த முயன்ற சேனல் தரப்புக்கு கடைசியில் தோல்வியே மிஞ்சியிருக்கிறது. இதனால் அந்த விருது, வேறு ஒரு ஜோடிக்குக் கிடைத்திருக்கிறது. அது மட்டுமல்லாமல், எப்போது வேண்டுமானலும், இருவரில் ஒருவர் சீரியலை விட்டு விலகலாம்” என்ற அதிர்ச்சியான செய்தியும் நம் காதுகளுக்குக் கேட்டது.
அங்கீகாரத்தை தவிர்த்து விடும் அளவுக்கு குமரனுக்கும் சித்ராவுக்கும் என்ன பிரச்னை என மண்டையைப் பிய்த்துக் கொள்கிறார்கள் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.