கோவா டூர்… டாக்ஸி டிரைவருடன் பஞ்சாயத்து… போலீசில் புகார்!

பிரபல நடிகை முமைத் கான் சமீபத்தில் கோவாவுக்கு சென்றபோது வாடகைக் காருக்கு பணம் தரவில்லை என்று குற்றம்சாட்டிய கார் ஓட்டுநர் மீது அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

By: October 2, 2020, 9:52:29 PM

பிரபல நடிகை முமைத் கான் சமீபத்தில் கோவாவுக்கு சென்றபோது வாடகைக் காருக்கு பணம் தரவில்லை என்று குற்றம்சாட்டிய கார் ஓட்டுநர் மீது அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

நடிகை முமைத் கான் தமிழ் சினிமாவில் விஜய் நடித்த போக்கிரி, விக்ரம் நடித்த கந்தசாமி, பிரசாந்த் நடித்த மலையனூர் மம்பட்டியான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களில் முமைத் கான் என் பேரு மீனாகுமாரி, என் செல்ல பேரு ஆப்பிள் ஆகிய செம ஹாட் பாடல்களுக்கு டான்ஸ் ஆடி ரசிகர்களை கிரங்கடித்தார்.

இந்த நிலையில், நடிகை முமைத் கான் சமீபத்தில் கோவாவுக்கு சென்றபோது வாடகைக் காருக்கு பணத்தை தரவில்லை என்று குற்றம்சாட்டிய கார் ஓட்டுநர் மீது அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

நடிகை முமைத் கானை கோவாவுக்கு 3 நாள் டூர் அழைத்துச் சென்றதாகவும், அந்தத் தொகையை அவர் இன்னும் செலுத்தவில்லை என்றும் வாடகை கார் நிறுவனம் கூறியிருந்தது. இந்த பயணத்தை சில நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டதாக கேப் நிறுவனம் குற்றம் சாட்டியது. பின்னர், அவர் ஹைதராபாத்திற்கு திரும்பியபோது, கூடுதல் தொகையை செலுத்த மறுத்துவிட்டார் என்று தெரிவித்துள்ளது. கார் ஓட்டுநர் வீடியோவில் இந்த சம்பவத்தை விவரித்து, கேப் டிரைவர்கள் சங்கத்துடன் ஆலோசிப்பதாக கூறினார்.

இதனிடையே, முமைத் கான், தான் கார் வாடகை நிலுவைத் தொகையை எல்லாம் கொடுத்துவிட்டதாகக் கூறி போலீஸுக்கு சென்றுள்ளார். மேலும், அவர் கேப் நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மீனாகுமாரி பாடல் டான்ஸர் முமைத் கான் கொடுத்துள்ள இந்த புகாரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Mumaith khan police complaint against cab driver who alleged she yet to settle his dues for a trip to goa

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X