மறைந்த பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவியை போற்றி கவுரவிக்கும் வகையில், மும்பையில் அவர் வாழ்ந்த இடத்தின் சந்திப்புக்கு அவரது பெயரை சூட்டியுள்ளது மும்பை மாநகராட்சி. இது தொடர்பான புகைப்படத்தை அவரது கணவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல ஹிட் படங்களை கொடுத்தவர் ஸ்ரீதேவி. முருகன் வேடத்தில் நடித்து அசத்திய ஸ்ரீதேவி, 1976-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான மூன்று முடிச்சு என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இந்த படம் பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், முதல் படத்திலேயே கைதேர்ந்த நடிகையாக நடிப்பில் அசத்தியிருந்தார் ஸ்ரீதேவி.
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் ஆகிய இருவருடனும், இணைந்து ஒரு சில வெற்றிப்படங்களை கொடுத்த இவர், தெலுங்கு, கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இவரது கணவர் போனி கபூர் இந்தியில் பெரிய தயாரிப்பாளராக இருக்கும் நிலையில், ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி மற்றும் குஷி கபூர் ஆகியோர் நடிகைகளாக வலம் வருகின்றனர். சமீபத்தில் தெலுங்கில் வெளியான தேவரா படத்தின் மூலம், ஜான்வி கபூர் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
அதேபோல் ஸ்ரீதேவியின் இளைய மகன் குஷி கபூர், இந்தியில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது ஸ்ரீதேவி இல்லை என்றாலும் நாள்தோறும் அவரை பற்றிய தகவல்கள் வந்துகொண்டு இருக்கிறது. அந்த வகையில், தற்போது ஸ்ரீதேவியை கவுரவப்படுத்தும் விதமாக மும்பையில், லோகண்ட்வாலா சந்திப்புக்கு ஸ்ரீதேவி கபூர் சவுக் என்று பெயர் மாற்றம் செய்துள்ளது மும்பை மாநகராட்சி. இந்த பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தான் ஸ்ரீதேவி தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
இந்த பெயர் மாற்றம் செய்த பலகை திறப்பு விழாவில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தனது மகள் குஷி கபூருடன் கலந்துகொண்ட நிலையில், இது தொடர்பான புகைப்படத்தை போனி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“