நயன்தாரா நடித்து சமீபத்தில் வெளியான அன்னப்பூரணி திரைப்படம் இந்றது மதத்தையும், கடவுள் ராமரை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாகவும் மும்பை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நயன்தாராவின் 75-வது படம் என்ற விளம்பரத்துடன் சமீபத்தில் வெளியான படம் அன்னப்பூரணி. ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், உள்ளிட்ட முனனணி நடிகர்கள் பலர் நடித்திருந்த இந்த படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். கடந்த டிசம்பர் 1-ந் தேதி வெளியான இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது.
இதனிடையே அன்னப்பூரணி திரைப்படம், சமீபத்தில் ஒடிடி தளமான நெட்ஃபிளக்ஸில் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அன்னபூரணி: தி காடஸ் ஆஃப் ஃபுட்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், வால்மீகியின் ராமாயணத்தை தவறாக சித்தரித்து ராமரை விமர்சித்ததாக இந்து தகவல் தொழில்நுட்ப பிரிவு மும்பை போலீசில் புகார் அளித்துள்ளது. படத்தின் கதை, சமையல் கலைஞராக ஆசைப்படும் ஒரு இந்து கோவில் பூஜாரியின் மகளாக இருக்கும் நாயகி, அசைவ உணவை சமைக்க நிறைய சவால்களையும் போராட்டங்களையும் எதிர்கொள்கிறாள்.
இந்த படத்தின் ஒரு காட்சியில், சமையல் போட்டிக்கு முன் தலையை தாவணியால் மூடிக்கொண்டு நயன்தாரா இஸ்லாமிய பிரார்த்தனை நமாஸ் செய்கிறார். படத்தில் போட்டியில் கலந்துகொள்வதற்கு முன்பு, கல்லூரியில் இருந்து அவரது தோழி ஒருவர் சமைப்பதற்கு முன் நமாஸ் செய்ததால், அவரது பிரியாணி நன்றாக சுவையாக இருந்தது என்று சொல்லி, சமையல் போட்டிக்கு முன்பும் அதையே முயற்சித்ததாகவும் கூறியுள்ளார்..
இந்த காட்சி பலரது மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தி ரிபப்ளிக் செய்திகளின்படி, மும்பையில் உள்ள எல்டி மார்க் காவல் நிலையத்தில் அன்னப்பூரணி படத்தின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது, இந்த படம் லவ் ஜிஹாத்தை ஊக்குவிக்கிறது. படத்தின் காட்சியில் நடிகர் ஜெய், ராமர் இறைச்சி உண்பவர் என்று கூறியது, இது மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. இதனால் அன்னப்பூரணி திரைப்படம் சர்ச்சையாக வெடித்துள்ளது,
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil