Mundhanai Mudichu : 1983-ஆம் வருடம் பாக்யராஜ் இயக்கி, நடித்து பெரும் வெற்றிபெற்ற திரைப்படம், முந்தானை முடிச்சு. இதனை ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தின் மூலம், தமிழுக்கு அறிமுகம் ஆகியிருந்தார் நடிகை ஊர்வசி. அதோடு சிறந்த நடிப்பிற்காக, தமிழ்நாடு மாநில விருதையும் பெற்றிருந்தார்.
ஓட்டுநருக்கும் பயணிகளுக்கும் நடுவே ஒரு மெல்லிய திரை : கொரோனா பரவலை தடுக்க சண்டிகர் புது பாணி
பூர்ணிமா பாக்யராஜ், தீபா, தவக்களை சிட்டிபாபு, கே.கே சௌந்தர் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்திற்கு, இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். படம் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைத்தது. சென்னையில் 4 தியேட்டர்களிலும், மற்ற இடங்களில் 10 தியேட்டர்களிலும், 25 வாரங்களுக்கு மேல் ஓடியது. அதோடு திருவனந்தபுரத்தில் 25 வாரங்களுக்கு மேல் ஓடிய, முதல் தமிழ்த் திரைப்படமும் முந்தானை முடிச்சு தான். இந்த படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய பாக்யராஜுக்கு, பிலிம்பேர் விருதும் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் முந்தானை முடிச்சு படம் ரீமேக் செய்யப்பட்டது.
சோகத்தில் ஏமி ஜாக்ஸன், புன்னகையுடன் மேகா ஆகாஷ் – படத் தொகுப்பு
இப்படம் வெளியாகி 37 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், தற்போது ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜே.எஸ்.பி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில், சதீஷ்குமார் இதனை தயாரிக்கிறார். படத்தில் கதாநாயகனாக சசிகுமார் நடிக்க, அவரை பாக்யராஜ் இயக்குகிறார். இவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தபோது, எடுக்கப்பட்ட படம் தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது. படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், குறித்த விபரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”