/tamil-ie/media/media_files/uploads/2020/01/a1044.jpg)
murattu thamizhan da sond video released pattas dhanush - பட்டாஸ் படத்தின் ரிப்பீட் மோட் 'முரட்டு தமிழன்' பாடல் வீடியோ வந்தாச்சு!
அசுரன் படத்தின் மெகா வெற்றிக்குப் பிறகு, எனை நோக்கி பாயாத தோட்டாவுக்கு பிறகு, தனுஷ் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகியுள்ள பட்டாஸ் திரைப்படம் கலவையான விமர்சனத்துடன் கல்லா கட்டி வருகிறது.
"பட்டாஸ்" படத்தையும் சுட்டது தமிழ்ராக்கர்ஸ்...
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை ’எதிர் நீச்சல்’, ’காக்கிச்சட்டை’, ’கொடி’ ஆகிய படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கியிருக்கிறார். அப்பா – மகன் என இருவேடங்களில் ’பட்டாஸ்’ படத்தில் நடித்திருக்கிறார் தனுஷ். அவருக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சோடா, சினேகா என 2 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள, இப்படத்திற்கு விவேக் – மெர்வின் இசையமைத்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
தனுஷ் இரட்டை வேடங்களில் நடிப்பில் அசத்தியுள்ளார். தந்தை கேரக்டரில் வரும் தனுஷ், பக்குவப்பட்ட நடிப்பிலும், மகனாக வரும் தனுஷ், இளமை துள்ளலுடனும் படத்தை ரசிகர்கள் கொண்டாட வைக்க உதவியிருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் முரட்டு தமிழன் பாடலின் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
தனுஷின் ரசிகர்கள் இப்பாடலை கொண்டாடி வருகின்றனர்.
சிவசாமி முதல் திரவியப்பெருமான் வரை தனுஷ் - பட்டாஸ் திரைவிமர்சனம்