குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான சாந்தனு பாக்யராஜ், ஹீரோவாகவும் பல படங்களில் நடித்தார். இருப்பினும் அந்தப் படங்கள் பெரிதாகப் பேசப்படவில்லை. தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் ‘மாஸ்டர்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் மற்றுமொரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அந்தப் படத்தின் டைட்டில் லுக் இன்று வெளியாகியுள்ளது. இயக்குநர், ஶ்ரீஜர் இயக்கத்தில் ரொமாண்டிக் கதைகளத்தில் அந்தப்படம் உருவாகிறது. படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்க, இயக்குநர்-நடிகர் பாக்கியராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இத்திரைப்படத்தை சிவசுப்பிரமணியன் மற்றும் சரவணபிரியனுடன் இனைந்து ‘நட்புனா என்னனு தெரியுமா' திரைப்படத்தைத் தயாரித்த ரவிந்தர் சந்திரசேகர் தயாரிக்கிறார். படத்தின் இயக்குநர் ஶ்ரீஜர் தென்னிந்தியத் தொலைக்காட்சி சீரியல்களில் அனுபவம் பெற்றதோடு, மலையாளத்தில் ‘லாவெண்டர்' மற்றும் தமிழில் ‘ஜாம்பவான்' ஆகிய படங்களில் வேலை செய்திருக்கிறார்.
இந்நிலையில், படத்துக்கு ‘முருங்கைக்காய் சிப்ஸ்' என புதுவிதமான டைட்டிலை படக்குழுவினர் வைத்துள்ளனர். இப்படம் முதல் இரவைப் பற்றியும், அந்த சடங்கின் முக்கியத்துவம் பற்றியும் விவரிக்கும் விதமாக எடுக்கப்படுகிறதாம். அதோடு மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய வேடடங்களில் நடிக்கிறார்கள்.
முருங்கைக்காயும் பாக்யராஜும் தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பைப் பெற்ற காம்பினேஷன். அந்த வகையில் ’முறுங்கைக்காய் சிப்ஸ்’ ரசிகர்களிடம் எதிரபார்ப்பை கிளப்பியுள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”