இசைஞானி இளையராஜா முன்னணி இசையமைப்பாளராக உள்ளார். அவர் தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக உள்ளார். இன்றைய இளைஞர்களும் அவருடைய இசைக்கு அடிமையாகி உள்ளனர். எல்லா தலைமுறைகளையும் கவரும் வண்ணம் அவரது இசை உள்ளது.
80களில் இருந்து இசையமைத்து வரும் இளையராஜா இதுவரை 1000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இன்றைய ட்ரெண்டிங்கிற்கு ஏற்ப இசையையும் அவர் அமைத்து ரசிகர்களை கவர்கிறார். அந்த வகையில் தற்போது இளையராஜா மற்ற பிரபலங்களைப் போல் யூடியூப் சேனல் தொடங்கி உள்ளார்.
'Ilaiyaraaja BGM's Official' என்ற பெயரில் யூடியூப் சேனல் தொடங்கி உள்ளார். இதுமட்டும் இல்லாமல் இதில் முதல் வீடியோவாக புன்னகை மன்னன் படத்தின் பின்னணி இசையை பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பின்னணி இசைக்கு மாண்டேஜ் ஃபுட்டேஜாக இந்தியாவின் பல இடங்களுக்குச் சென்று எடுக்கப்பட்ட வீடியோக்களை இணைத்து வெளியிடப்பட்டுள்ளார்.
இந்த வீடியோவை ஏராளமான ரசிகர்கள் பார்த்துள்ளனர். பலர் சேனலை சப்ஸ்கிரைப் செய்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“