/indian-express-tamil/media/media_files/2025/08/28/download-2-2025-08-28-18-13-08.jpg)
அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள 'லப்பர் பந்து' திரைப்படம், கிராமத்து பின்னணியில் நடைபெறும் க்ரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் 'கெத்து' தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார்கள். கதாநாயகிகளாக சுவாசிகா விஜய் மற்றும் 'வதந்தி' புகழ் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ளனர். இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இதில், தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பல முன்னணி supporting நடிகர்களும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளவர் ஷான் ரோல்டன், அவர் தரும் இசை இப்படத்திற்கு மேலும் வலுவான ஆதாரமாக அமைந்துள்ளது.
செப்டம்பர் 20-ஆம் தேதி போன வருடம் திரையரங்குகளில் வெளியான 'லப்பர் பந்து', ரசிகர்களிடையே நேரடியாக மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. கிராமத்து சூழலுக்கு ஏற்ப காமெடியும், உணர்வும், கிரிக்கெட் வெற்றிச் சூறாவளியும் கலந்த ஒரு திரைப்படமாக இது பெரும்பாலானோரது கவனத்தை ஈர்த்தது.
இந்தப் படத்தில் ஒரு சிறப்புப் பரிசாக, இளையராஜா இசையமைத்த 'பொட்டு வச்ச தங்க குடம்' என்ற பழமையான புகழ்பெற்ற பாடல் இடம் பெற்றுள்ளது. இந்த பாடல், நடிகர் விஜயகாந்த் நடித்த 'பொன்மனச் செல்வன்' படத்தில் இடம்பெற்றது. இப்போது, 'லப்பர் பந்து'வில் தினேஷ் நடித்திருக்கும் விசேஷக் காட்சிக்காக, அந்த பாடல் தனிப்பட்ட முறையில் திருத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, விஜயகாந்த் ரசிகரான தினேஷின் கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய ஆதாயமாகவும், ரசிகர்களிடையே ஒரு நல்ல உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சிறப்பான வாய்ப்புக்காக, தினேஷ், ஹரிஷ் கல்யாண், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து உள்ளிட்ட படக்குழுவினர் நேரில் இளையராஜாவை சந்தித்து, அவரிடம் நன்றி தெரிவித்தனர்.
இதை பற்றி ஒரு நேர்காணலில் இசையமைப்பாளர் பாறை பேசியுள்ளார். "லப்பர் பந்து என்று ஒரு படம் வந்தது, அதில் அவர்கள் விஜயகாந்த் அவர்களின் பாடல் ஒன்றை பயன்படுத்தியிருப்பார்கள். ஆனால் அதற்க்கு முன்பு அவர்கள் இளையராஜாவிடம் அனுமதி கேட்டுள்ளார். அவர் உடனே எந்த பைசாவும் வாங்காமல் அதற்க்கு அனுமதி கொடுத்திருக்கிறார்.
அவர் நாம் நினைக்கும் அளவிற்கெல்லாம் மேலான ஒரு இசையமைப்பாளர். அவரிடம் ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு ரைட்ஸ் இருக்கிறது. அப்படி இருக்கும் போது ஒரு அனுமதி கேட்பது தான் சரியான விஷயம். அவரும் அதை மட்டும் தான் எதிர்பார்ப்பார்." என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.