/indian-express-tamil/media/media_files/2025/09/13/spp-2025-09-13-12-57-10.jpg)
யேசுதாஸ்க்கு ஏன் அந்த பாட்டு கொடுத்த? தப்பு பண்ணிட்ட தேவா; எஸ்.பி.பி சொன்னதால், மீண்டும் பதிவான அதே பாடல்!
கானா பாடல்களுக்கு பெயர் போன இசையமைப்பாளர் தேவா ‘தேனிசை தென்றல்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இவரது கானா பாடல்கள் அன்று முதல் இன்று வரை பட்டித் தொட்டியெல்லாம் ஒலிக்கிறது. இவர் பாரம்பரிய மேற்கத்திய இசையை கற்றுத் தேர்ந்தவர். இசையமைப்பாளர் தேவா 400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இசையமைப்பாளர் தேவாவிற்கு இதுவரை தேசிய விருது கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவாவிற்கே தேசிய விருது கிடைத்த நிலையில் பிரபல இசையமைப்பாளரான தேவாவிற்கு ஏன் இன்னும் தேசிய விருது வழங்கப்படவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் தேசிய விருது பட்டியல் அறிவித்த நிலையில் தேவாவிற்கு இதுவரை தேசிய விருது கொடுக்காததது பேசுப்பொருளாகியது.
இசையமைப்பாளர் தேவா தற்போது கான்செட் நிகழ்ச்சிகள் நடத்துவதிலும் அதிக ஆர்வம் செலுத்திவருகிறார். இவர் அண்மையில் இலங்கையில் கான்செட் நிகழ்ச்சி நடத்தினார். இந்நிலையில், இசையமைப்பாளர் தேவா ‘அண்ணாமலை’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘பெண் புறா’ பாடலை யேசுதாஸ் ஏன் பாடினார் என்று விளக்களித்துள்ளார்.
அவர் பேசியதாவது, ”அண்ணாமலை’ திரைப்படத்தில் எல்லா பாடல்களும் எஸ்.பி.பி தான் பாடியிருப்பார். ஆனால் ஒரு பெண் புறா பாடல் மட்டும் யேசுதாஸ் பாடியிருப்பார். யேசுதாஸ் சார் சவுண்டிங் நன்றாக இருக்கும். அப்போது எஸ்.பி.பி சார் என்னை காமெடியாக ஒன்று கேட்டார். எல்லா பாடல்களும் எனக்கு கொடுத்தீர்கள். ஏன் ‘பெண் புறா’ பாடலை மட்டும் யேசுதாஸிற்கு கொடுத்தீர்கள் என்றார்.
அப்போது யேசுதாஸிற்கு இந்த படத்தில் ஒரு பாடல் கொடுக்க வேண்டும் என்பதற்காக கொடுத்தேன் என்றேன். எஸ்.பி.பி-யிடம் யேசுதாஸ் குரல் நன்றாக இருக்கிறது என்று சொல்ல முடியாது என்பதால் இப்படி சொன்னேன். இல்லை... இல்லை.. நீ தப்பு பண்ணிட்ட என்றார். அப்போது ’அண்ணாமலை’ படத்தை இயக்கிய இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா , கன்னடத்தில் ஒரு படத்தை இயக்கினார்.
அதில் ‘பெண் புறா’ பாடலின் டியூனை போட முடியுமா என்று கேட்டார். நான் சரி என்று சொல்லிவிட்டு அந்த பாடலின் டியூனை போட்டுவிட்டு பாடுவதற்கு எஸ்.பி.பி சாரை அழைத்தேன். அவர் ‘பெண் புறா’ பாடல் பாடுவதற்கு மிகவும் ஆசைப்பட்டார் என்பதால் அவரை அழைத்தேன். கன்னடத்தில் எஸ்.பி.பி அந்த பாடலை மிகவும் அருமையாக பாடினார்” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.