Anvi's photos : இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அன்வி என்று பெயரிடப்பட்டுள்ள அக்குழந்தையின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. ஒரு குட்டி தேவதை ஒன்றை மலர்களால் அலங்கரிப்பட்ட பேக்ட்ராப்பில் அமர வைத்து எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படம் அவரை ஒரு வன தேவதை போல் காட்சிப்படுத்துகிறது.
மற்றொரு புகைப்படத்தில் இளஞ்சிவப்பு நிற பேக்ட்ராப்பில் அன்வியை வைத்து மற்றொரு புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளனர் அந்த தம்பதியினர்.
இந்த குழந்தையின் புகைப்படங்களை தரவிறக்கம் செய்திருக்கும் ஜிவியின் ரசிகர்கள் தங்களின் அலைபேசிகளின் வால்பேப்பராக வைத்து ரசித்தும் “இனி எந்தன் கைபேசி அழகாகிறது” என்றும் பதிவிட்டுள்ளனர். நேற்று இரவு வெளியிடப்பட்ட புகைப்படத்தை இதுவரை 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். மூன்று மணி நேரத்திற்கு முன்பு வெளியிடப்பட்ட படத்தை 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil