/indian-express-tamil/media/media_files/2025/10/07/rajinikanth-2025-10-07-17-18-41.jpg)
தமிழ் திரையுலகில் ‘அன்னக்கிளி’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக உருவானவர் இளையராஜா. தனது முதல் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இளையராஜா பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து வருகிறார். ‘இசைஞானி’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இளையராஜா 1000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இசைக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்த மாமனிதர்.
தனது ஒவ்வொரு இசையிலும் எதாவது ஒரு புதுமையை செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். பொதுவாக இளையராஜா என்றால் தலைக்கனம் பிடித்தவர் என்ற பரவலாக கேட்கப்படும் ஒரு விஷயமாகும். இசைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவருக்கு சற்று தலைக்கனம் இருப்பதில் தவறு ஏதும் இல்லையே என்று ரசிகர்கள் கருத்து தெரிவிப்பதும் உண்டு. இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா, மறைந்த பாடகி பவதாரணி, யுவன் சங்கராஜா என அனைவருமே இசைத்துறையில் மிகவும் பிரபலமானவர்கள்.
இளையராஜா சமீபத்தில் சிம்பொனி இசை அமைத்து சாதனை படைத்தார். இவருக்கு தமிழ்நாடு அரசு பாராட்டு விழா நடத்தியது. அன்றும் இன்றும் பிசியான இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா மட்டும் தான். இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜானி’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘செனோரீட்டா’ பாடல் எவ்வாறு உருவானது என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “ஒரு காலக்கட்டத்தில் ஆலியார் டேம் போய் கம்போஸ் செய்வது பிரபலமாக இருந்தது. ஆலியார் கெஸ்ட் ஹவுஸில் இரண்டு, மூன்று நாட்கள் தங்கிவிட்டு ஒரு நான்கு , ஐந்து படங்களுக்கு இசையமைப்போம்.
அந்த மாதிரி ஒரு கம்போஸிங்கிற்கு இயக்குநர் மகேந்திரன் மற்றும் தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி என்னை அழைத்து சென்றார்கள். நான் என்பக்கவாத்திய குழுவுடன் சென்றிருந்தேன். தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி-க்கு வீடு கோயம்புத்தூரில் இருந்ததால் அவர் வீட்டிற்கு தினமும் போய்ட்டு வருவார். அப்படி ஒரு நாள் தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி வீட்டிற்கு சென்றுவிட்டு வந்ததும் என்னிடம் சொன்னார் உன் மனைவிக்கு பிரசவம் ஆகிவிட்டது. உனக்கு மகன் பிறந்திருக்கிறான் என்று சொன்னார்.
என் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கூட நான் கம்போஸிங்கில் தான் இருந்தேன். என் மனைவி உடன் இருந்து அவளை பார்க்கவில்லை. அதை என் மனைவியும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. யுவன் சங்கர் ராஜா பிறந்த சந்தோஷத்தில் நான் இசையமைத்த பாடல் தான் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜானி’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘செனோரீட்டா’ பாடல்” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.