/indian-express-tamil/media/media_files/2025/09/20/msv-2025-09-20-17-00-39.jpg)
எனக்கு 22 வயசு தான், இந்த பாட்டை இப்ப கேட்டாலும் 10 வயசு குறைஞ்சிடும்; ரஜினி - கமல் கடைசி பட பாட்டு ரகசியம் உடைத்த எம்.எஸ்.வி!
கடந்த 1979-ஆம் ஆண்டு கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘நினைத்தாலே இனிக்கும்’. இந்த படத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஜெயபிரதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகள் எழுதினார்.
இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அந்த காலத்தில் திருவிழாக் கோலம் பூண்டது. இந்தப் படத்தின் ஹீரோ கமல்ஹாசன் என்றாலும் துணைப் பாத்திரமாக வந்த ரஜினிகாந்திற்கு நிறைய காட்சிகளை கொடுத்தார் பாலசந்தர்.
பாலசந்தரால் தான் ரஜினி மிகப்பெரிய கவனம் பெற்றார். துவக்கப் படங்களில் ரஜினியை வில்லனாக பயன்படுத்திய பாலசந்தர், ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் முற்றிலும் மாறுபட்ட பாத்திரத்தில் ஜாலியான இளைஞனாக பயன்படுத்தினார்.
’நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘எங்கேயும் எப்போதும்’ பாடல் 'கத்தாழ காட்டுக்குள்ளே விறகொடிக்கப் போனாளாம்’ என்ற கிராமப்புற பாட்டிலிருந்து வந்ததாகும். அதேபோன்று, ’சம்போ சிவசம்போ’ என்ற பாடல், மலபாரில் பிரலமான ’ஜன்னா இங்கினில் ஜனிச்ச பூமியில் கனிகாடம் சிவசம்போ’ என்ற பாடலை முன் மாதிரியாக வைத்து இசையமைக்கப்பட்டது.
இதுகுறித்து இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது, "ஒரு குத்துப்பாட்டை யாரும் கண்டுபிடிக்காத வகையில் வெஸ்டர்ன் பாட்டாக மாற்ற வேண்டும். அப்படி தான் ‘எங்கேயும் எப்போதும்’ பாடல் உருவானது. இப்படி ஒரு பாட்டில் இருந்து தான் மற்றொரு பாடல் வந்தது. இந்த பாட்டை கேட்டால் 10 வயது குறைந்துவிடும். எனக்கு எப்போதும் 22 வயது தான்” என்றார்.
எம்.எஸ்.வி.யின் பாடல்கள் என்றாலே அதில் ஒரு துள்ளலும், துடிப்பும் நிச்சயம் கலந்திருக்கும். மனதை மயக்கும் இனிமையான பாடல்களைத் தந்ததாலேயே அவருக்கு மெல்லிசை மன்னன் என்ற பட்டம் கிடைத்தது. கவிஞர்களின் பாடல் வரிகளுக்கு தனது இசையால் உயிர் கொடுத்தவர் எம்.எஸ்.வி.
சிவாஜி, எம்.ஜி.ஆர்., ரஜினி, கமல், அஜித் என மூன்று தலைமுறைகளைத் தாண்டி பணிபுரிந்தவர் எம்.எஸ்.வி. ஜெய்சங்கர், சிவக்குமார், முத்துராமன் என பாராபட்சமின்றி தனது இசையை அள்ளி வழங்கிய வள்ளல் அவர். இசையமைப்பதோடு நிறுத்தி விடாமல், சில பாடல்களை தந்து வித்தியாசமான குரலால் பாடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் எம்.எஸ்.வி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.