இளையராஜா பின் சென்று ஏமார்ந்த விக்ரம்; முதல் படத்தில் பாடல்கள் பெரிய ஹிட்டானது எப்படி? மனம் திறந்த எஸ்.ஏ.ராஜ்குமார்!

இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் தனது முதல் படத்தின் பாடல்கள் பெரிய ஹிட்டானது குறித்து மனம் திறந்துள்ளார்.

இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் தனது முதல் படத்தின் பாடல்கள் பெரிய ஹிட்டானது குறித்து மனம் திறந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
sa

இளையராஜா பின் சென்று ஏமார்ந்த விக்ரம்; முதல் படத்தில் பாடல்கள் பெரிய ஹிட்டானது எப்படி? மனம் திறந்த எஸ்.ஏ.ராஜ்குமார்!

கடந்த 1990-ஆம் ஆண்டு இயக்குநர் விக்ரம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘புது வசந்தம்’. இந்த படத்தில் முரளி, ஆனந்த் பாபு, ராஜா, சார்லி, சித்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஆர்.பி.சவுத்ரி தயாரித்திருந்த இந்த படத்திற்கு எஸ்.ஏ. ராஜ்குமார் இசையமைத்திருந்தார்.

Advertisment

நான்கு நண்பர்கள் தெரு இசைக்கலைஞர்களாக உள்ளனர். வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் இவர்கள் எப்படியாவது இசையில் சாதித்து விட வேண்டும் என்று எண்ணுகின்றனர். இவர்களின் தோழியாக சித்தாரா இருப்பார். நான்கு ஆண்கள் ஒரு பெண் என்றாலே காதல் கதை தான் என்று நினைக்க வைக்கும் சூழலில் காதல் என்ற பேச்சே இந்த படத்தில் இருக்காது.

படம் முழுவதும் களங்கமில்லா நட்பு, பாசம், நேசம் மட்டுமே வெளிப்படும். இந்த படத்தின் கிளைமேக்ஸ் தான் இப்படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது. இந்த படம் வெளியான போது ’சினிமாவில் பழம் தின்னு கொட்டை போட்ட இயக்குநர்கள் கூட இந்த மாதிரி எடுக்கல’ என்று இளம் படைப்பாளியான விக்ரமனை இயக்குநர் கே.பாலசந்தர் மனதார பாராட்டினார்.

இந்நிலையில், ‘புது வசந்தம்’ திரைப்படத்திற்கு இசையமைத்தது குறித்து எஸ்.ஏ.ராஜ்குமார் மனம் திறந்துள்ளார். அவர் பேசியதாவது,மியூசிக்கல் பிலிம் என்றாலே இளையராஜா சார் தான். நான் அப்போது புதிதாக வந்த இசையமைப்பாளர். 

Advertisment
Advertisements

இளையராஜா வைத்து படம் பண்ண வேண்டும் என்று நிறைய இயக்குநர்கள் சென்னை வந்ததுண்டு. இயக்குநர் விக்ரமன், இளையராஜா வைத்து தான் ’புது வசந்தம்’ படத்தை பண்ண வேண்டும் என்று நினைத்துள்ளார். 

அவர் ரொம்ப நாள் முயற்சி செய்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது என்னையா நீ நல்ல கதை பண்ணிவிட்டு இசையமைப்பாளரை தேர்வு செய்யாமல் இருக்கிறாய் என்று சவுத்ரி சொல்லியிருக்கிறார். அப்போது எஸ்.ஏ. ராஜ்குமார் என்று ஒரு இசையமைப்பாளர் இருக்கிறார் அவர் நன்றாக இசையமைப்பார் என்று விக்ரமன் சொன்ன பிறகு அவர்கள் என்னை தொடர்பு கொண்டார்கள். 

‘புது வசந்தம்’ படத்தின் கதையை சொன்னதும் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஒரே நாள் ஒரு மணிநேரத்தில் அந்த மூன்று பாடல்களின் பல்லவி, சரணம் மற்றும் லிரிக்ஸோட கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். எனக்கு அந்த மூன்று பாடல்களையும் எழுதி கம்போஸ் செய்வதற்கு ஒரு மணிநேரம் தான் ஆனது” என்றார்.

Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: