/indian-express-tamil/media/media_files/2025/08/20/screenshot-2025-08-20-215834-2025-08-20-21-58-51.jpg)
சங்கர் இறந்துவிட்டாலும், தன் இசை இரட்டையரான சங்கரின் பெயரை தன் பெயரோடு சேர்த்து போட்டு, மறைந்த அவரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார் கணேஷ் என்கிற சங்கர் கணேஷ்.
இரட்டையர்கள் கூட்டணியில் தமிழ் சினிமா எத்தனையோ இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என பலரை சந்தித்திருக்கிறது. விஸ்வநாதன்-ராமமூர்த்தி, சந்திரபோஸ்-தேவா என அந்த பட்டியல் பெரிதாக போகும்.
அந்த வரிசையில் சங்கர்-கணேஷ் கூட்டணி பெரிய பெரிய ஹிட் பாடல்களை கொடுத்தவர்கள்.
தனது இசை கூட்டாளி சங்கர் மறைந்த பிறகும், தனது பெயரை சங்கர் கணேஷ் என பெருமையோடு இன்றும் அழைத்துக் கொண்டு, பிறரையும் அழைக்க வைப்பவர் ஷங்கர் கணேஷ். இவர் எம்.ஜி.ஆர்., காலத்திலிருந்து இசையமைத்தவர்.
ஆனால் இளமையில் அவர் இசைத்துறைக்கு வந்தது, பேர்விபத்து. பள்ளியில் ஆண்டு விழாவிற்கு நடனமாடுவதற்கு தலைமை ஆசிரியர் அழைத்ததும், 'ஓ தேவதாஸ்..' பாடலுக்கு பெண் வேடத்தில் நடன மாடியதும் தான், கணேஷின் ஆரம்ப கால சினிமா மோகம்.
கவிஞர் கண்ணதாசனை பிடித்து, இசையமைக்கும் ஆசையை சொல்ல, ஜெய்சங்கர் படத்தில் இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார்கள் சங்கர்- கணேஷ். அதன் பின் எம்.ஜி.ஆர், ரஜினி என சூப்பர் ஸ்டார்களுக்கு எல்லாம் இசையமைத்து, இரு தலைமுறைகளில் இன்றியமையாத இசையமைப்பாளராக வலம் வந்தனர்.
தமிழ் சினிமாவுக்கு தவிர்க்க முடியாத பல பாடல்களை தந்தவர் ஷங்கர் கணேஷ். அப்படி இவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ரங்கா படத்திற்கு இசையமைத்த அந்த தருணத்தை பகிர்ந்துள்ளார் ஒரு நேர்காணலில்.
"அந்த படத்தில் வரும் பட்டுக்கோட்டை நம்மாளு என்ற பாடல் இரண்டு வித்யாசமான மெட்டுக்களை வைத்து கம்போஸ் செய்த பாடல் தான்.
இரண்டு ஆட்கள் பாடும் பாடலை ஒரே மெட்டில் போட்டால் சுவாரசியமாக இருக்காது என்று நிலைக்கு இப்படி வித்யாசமாக செய்தேன்.
அந்த பாடல் தேடேரில் ஒலித்தவுடன் பயங்கர கிளாப்ஸ் சத்தம் இருந்தது. அனைவரும் அதை விரும்பி ரசித்தார்கள்." என்று கூறினார் அவர்.
இயக்குனர்களின் இசையமைப்பாளராக இன்றும் அறியப்படும் சங்கர்-கணேஷ் கூட்டணியில் சங்கர் இறந்துவிட்டாலும், தன் இசை இரட்டையரான சங்கரின் பெயரை தன் பெயரோடு சேர்த்து போட்டு, மறைந்த அவரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார் கணேஷ் என்கிற சங்கர் கணேஷ்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.