விஜய் டிவி பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வந்த முத்தழகு சீரியல் முடிவுக்கு நிலையில், இந்த சீரியலில் நாயகியாக நடித்த ஷோபனா அதே விஜய் டிவியில் புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகள் ஒரு விதமான பொழுதுபோக்கு கலாச்சாரத்தை உருவாக்கி உள்ளது. ஆண்கள், பெண்கள், பெரியவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள் என பலரும் சீரியல்க்களை விரும்பிப் பார்த்து வருகின்றனர். டி.ஆர்.பி-யில் எந்த டிவி சீரியல் டாப் என்பதில் டிவி சேனல்களுக்கு மத்தியில் பெரும் போட்டி நடந்து வருகிறது. ஏதாவது ஒரு சீரியல் டி.ஆர்.பி-யில் ரேட்டிங் குறைந்தால் இரண்டு சீரியல்களை சேர்த்து சங்கமம் எபிசோடு ஒளிபரப்புவது, டுவிஸ்டுக்கு மேல் டுவிஸ்டு வைப்பது என பார்வையாளர்களை ஈர்க்க முயற்சி செய்கின்றனர். என்ன செய்தும், டி.அர்.பி.-யில் மேலே வராத சீரியல்களை விரைவாக முடித்துவிட்டு அதே வேகத்தில் புதுப்புது சீரியல்களை தொடங்குகின்றனர்.
அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் இந்த ஆண்டு பல சீரியல்கள் சீரியல்கள் முடிவுக்கு வந்தது, அதில் ஒன்று தான், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற முத்தழகு சீரியல். இந்த சீரியலில் நாயகி முத்தழகு கதாபாத்திரத்தில் நடித்த ஷோபனாவுக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர்.
விஜய் டிவியில் நவம்பர் 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்ட முத்தழகு சீரியலில், ஆஷிஷ் சக்கரவர்த்தி மற்றும் ஷோபனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த சீரியல் கிராமத்து கதைக்களத்தை பின்னணியாகக் கொண்டது.
இரண்டு பெண்களை திருமணம் செய்துகொள்ளும் இளைஞன், அதில் கிராமத்து பெண்ணான முத்தழகுவை ஏமாற்றி கணவனை அபகரித்துக்கொள்ள முயற்சி செய்யும் நகரத்துப் பெண் வைஷாலி என்ற கதை முதலில் சுவாரசியமாக இருந்தது. ஒரு கட்டத்தில், இந்த சீரியலில் கதை இல்லாமல் வெறுமனே எபிசோடுகள் நகர்ந்துகொண்டிருந்ததால் அக்டோபர் 2024-ல் இந்த சீரியல் முடிக்கப்பட்டது. ஆனாலும், முத்தழகு கதாபாத்திரத்தில் நடித்த ஷோபனாவைக் மீண்டும் சின்னத்திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.
இந்நிலையில், முத்தழகு சீரியல் நடிகை ஷோபனா அதே விஜய் டிவியில், புதிய சீரியலில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த சீரியலில் ஹீரோ யார் தெரியுமா, விஜய் டிவியில் ஒளிபரப்பான மோதலும் காதலும் சீரியல் நடிகர் சமீர் நாயகனாக நடிக்கிறார். ஷோபனா நாயகியாக நடிக்கிறார். இதனால், ரசிகர்கள் ஷோபனாவுக்கு வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து வருகின்றனர்.
முத்தழகு சீரியல் ஷோபனா விஜய் டிவியில் நாயகியாக நடிக்க உள்ள் புதிய சீரியலுக்கு ‘பூங்காற்று திரும்புமா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஷோபனாவை மீண்டும் சின்னத்திரையில் எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி பூங்காற்று திரும்பியது என்றே கூறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“