Advertisment

Vijay TV Serial: கட்டிலில் தள்ளி முத்தம்; ரொமான்ஸில் உச்சத்தை எட்டும் முத்தழகு சீரியல்- வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு சீரியலின் புரோமோ வீடியோவில், கட்டிலில் தள்ளி முத்தம் கொடுக்கும் முத்தக்காட்சி ரசிகர்களால் என்று அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vijay TV Serial, Muthazhagu Serial Promo viral, Vijay TV Muthazhagu Serial, முத்தழகு சீரியலில் கட்டிலில் தள்ளி முத்தம், ரொமான்ஸில் உச்சத்தை எட்டும் முத்தழகு சீரியல், விஜய் டிவி, முத்தழகு சீரியல் வீடியோ, Muthazhagu Serial, Muthazhagu serial promo fans exciting

முத்தழகு சீரியல் photo: hotstar

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு சீரியலின் புரோமோ வீடியோவில், கட்டிலில் தள்ளி முத்தம் கொடுக்கும் முத்தக்காட்சி ரசிகர்களால் என்று அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

Advertisment

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்து டி.ஆர்.பி-யில் டாப் 5 இடங்களில் இடம் பிடித்து வருகிறது. விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றான முத்தழகு சீரியலின் புரோமோ வீடியோ ரசிகர்களையும் நெட்டிசன்களையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.

முத்தழகு சீரியலில் ஆஷிஷ் சக்ரவத்தி கதாநாயகனாகவும் ஷோபனா கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள். சீரியைல் இருவருக்கும் இடையேயான காதல் இந்த வாரம் ரொமான்ஸ் ஸ்டேஜ்ஜுக்கு சென்றுள்ளது.

முத்தழகு சீரியல் தற்போது வெற்றிகரமாக 500-வது எபிசோடை கடந்துள்ள நிலையில், இந்த சீரியலின் சிறப்பு புரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

விஜய் டிவி வெளியிட்டுள்ள முத்தழகு சீரியல் புரோமோவில், முதல் காட்சியே பார்வையாளர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டும் விதமாக, ஆஷிஷ் சக்ரவர்த்தி ஷோபனாவை கட்டிலில் தள்ளி முத்தமிடும் காட்சி இடம்பெற்றுள்ளது.

முத்தழகு சீரியலில் ஆஷிஷ் சக்ரவர்த்தி ஷோபனா இடையேயான ரொமான்ஸ் உச்சத்தை எட்டும் இந்த புரோமோ வீடியோ ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Vijay Tv Vijay Tv Serial 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment