/indian-express-tamil/media/media_files/bSE67MJNvtnyFO2U7urd.jpg)
முத்துதிரைப்படத்தின்படப்பிடிப்புபற்றிஅப்படத்தின்இயக்குநர்கே.எஸ்.ரவிக்குமார்பிஹைன்வுட்ஸ்நிகழ்ச்சிஒன்றில்கூறியுள்ளார். இந்தபடம்வெறும் 50 நாளில்படமாக்கப்பட்டதாகவும்கூறினார். முத்து திரைப்படம், 1995 ஆம் ஆண்டு கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மீனா, சரத் பாபு, ரகுவரன், ராதாரவி, வடிவேலு, செந்தில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
முத்து திரைப்படம், ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்ததுடன், தமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத பொழுதுபோக்கு படங்களில் ஒன்றாகவும் உள்ளது. இந்நிலையில்இந்தபடத்தின்படப்பிடிப்புபற்றிகே.எஸ்.ரவிக்குமார்கூறியிருப்பதைபற்றிபார்ப்போம்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'முத்து' திரைப்படம், அதன் பிரம்மாண்டமான தயாரிப்பு மற்றும் படப்பிடிப்புக்காகப் பேசப்பட்டது. பொதுவாக 40 முதல் 45 நாட்களில் முடிவடையக்கூடிய படப்பிடிப்புகள், 'முத்து' படத்திற்கு 66 நாட்கள் ஆனதாகஇயக்குநர்கே.ஸ்.ரவிக்குமார்கூறினார். இதில் ஆச்சரியமான தகவல் என்னவென்றால், மொத்தப் படப்பிடிப்பில் 16 நாட்கள் ஒரு குறிப்பிட்ட சாரிட் ரேஸ் காட்சிக்கு மட்டுமே செலவிடப்பட்டதாகவும்அவர்தெரிவித்தார்.
இதுகுறித்துஅவர்விவரிக்கையில், "அந்தசாரட்ரேஸில்குதிரைகள் நிறைய இருக்கும். ஒரு விசில் அடித்தால் எல்லாம் வர வேண்டும் என்றால், ஒன்று திரும்பி நிற்கும், ஒன்று பாதி வழியில் நின்றுவிடும். இப்படி ஆகும். அதை எடுத்து, எடுத்து, எடுத்து, அந்த சாரிட் ரேஸ் காட்சி மட்டும் 16 நாட்கள் ஆனது," என்று கூறினார்.
இந்த ஒரு காட்சிக்கு இத்தனை நாட்கள் செலவிடப்பட்டாலும், பாடல்கள் மற்றும் சண்டைக் காட்சிகள் உட்பட, படத்தின் மற்ற அனைத்துப் பகுதிகளும் 50 நாட்களில் முடிக்கப்பட்டன. பாடல்கள் மற்றும் சண்டைக் காட்சிகள் உட்பட மொத்தப் படமும் 50 நாட்களில் முடிக்கப்பட்ட நிலையில், இந்த ஒரு காட்சிக்கு மட்டும் இவ்வளவு நாட்கள் ஆனதுஎன்றார்.
இந்த 'முத்து' திரைப்படம், அதன் பிரம்மாண்டமான உருவாக்கம் மற்றும் படப்பிடிப்பு முறைகளுக்காகப் பெரிதும் பேசப்பட்டது. பொதுவாக, ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு 40 முதல் 45 நாட்களில் நிறைவடைந்துவிடும். ஆனால், 'முத்து' படத்திற்கு மட்டும் 66 நாட்கள் ஆனது. இதில் மிகவும் ஆச்சரியம் என்னவென்றால் மொத்தப் படப்பிடிப்பான 66 நாட்களில், 16 நாட்கள் ஒரு குறிப்பிட்ட சாரிட் ரேஸ் காட்சிக்கு மட்டுமே செலவிடப்பட்டதுதான்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.