தமிழ் சின்னத்திரையில் முக்கிய சீரியல் நடிகையாக வலம் வரும் வைஷாலி தனிகா தனது 2-வது திருமண நாளை தனது கணவருடன் கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, “எங்களுக்கு இனிய ஆண்டுவிழா“ என்று குறிப்பிட்டுள்ளார்.
விஷால் கேத்ரீன் தெரசா நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கதகளி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் வைஷாலி தனிகா. தொடர்ந்து திரி, சங்கிலி புங்கிலி கதவ தொற, காதல் கசகுதையா, எங்க அம்மா ராணி, கடுகு, ராஜா மந்திரி, பா பாண்டி, சர்கார், கண்டத்தை படிக்காதே போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான வைஷாலி, லட்சுமி வந்தாச்சு, ராஜா ராணி, முத்தழகு போன்ற பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்ட முத்தழகு சீரியலில், ஆஷிஷ் சக்ரவர்த்தி, வைஷாலி தணிகா மற்றும் லட்சுமி வாசுதேவன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஷாலினி ராஜன், சைலு இம்ரான், தக்ஷனா, கேபிஒய் சரத், சுர்ஜித் அன்சாரி, ராஜ் மோகன், ஷோபனா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
வைஷாலி தணிகா, ராஜா ராணி மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார், மேலும் மாப்பிள்ளை மற்றும் மகராசி போன்ற பிரபலமான சீரியல்களில் நடித்துள்ளார். முத்தழகு சீரியலில் அழகு என்ற கதாபாத்திரத்தில் வைஷாலி நடித்துள்ளார். நடிகை வைஷாலி தனிகாவுக்கும் சத்ய தேவுக்கும் அக்டோபர் 2021 அன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது.
சத்யதேவ் மற்றும் வைஷாலி இருவரும் தங்கள் நிச்சயதார்த்தம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், அவர்களின் திருமணம் குறித்து தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. தற்போது திருமணம் முடிந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தனது கணவருடன் வைஷாலி திருமண நாளை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“