என் வருங்கால கணவர், என் அம்மாவுடன் சேர்ந்து வாழ வேண்டும்: தனுஷ் பட நடிகை பேட்டி!

சாரா அலி கான், சமீபத்தில் ஒரு நேர்காணலின் போது தனது வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி மனம் திறந்தார்.

sara-amrita-ibrahim
My future husband will have to live with my mom says actress sara ali khan

சாரா அலி கான் சமீபத்தில் அத்ரங்கி ரே படத்தில் தனுஷ் மற்றும் அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தார். அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, சாரா யாருடனும் டேட்டிங் செய்யவில்லை. சாரா அலி கான் தனது பெற்றோர், தந்தை சைஃப் அலி கான் மற்றும் தாய் அம்ரிதா சிங் ஆகிய இருவருடனும் மிகவும் நெருக்கமானவர்.

சமீபத்தில் ஒரு நேர்காணலின் போது, ​​​​சாரா தனது வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி மனம் திறந்தார்.

ஒரு தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியின்போது, ​​சாரா அதை வெளிப்படுத்தினார். “நான் ஒருபோதும் எனது அம்மாவை விட்டு செல்லமாட்டேன். அதனால், என்னை திருமணம் செய்து கொள்ளும் நபர், அம்மாவுடன் சேர்ந்து வாழ்வதற்கு ஒத்துக்கொள்ள வேண்டும் என சாரா கூறினார்.

தனது தாயார் அம்ரிதா உடனான, தனது உறவைப் பற்றி மேலும் பேசிய சாரா, “என் அம்மாவின் உதவியுடன், எனது வளையல்களை, எனது ஆடையுடன் பொருத்தாமல் என்னால் ஒரு நேர்காணலுக்கு கூட வர முடியாது.

‘உன் துப்பட்டாவின் ஓரத்தில், பச்சை நிற சாலக் இருப்பதால், தயவு செய்து உன் கையில் பச்சை வளையல்களை சேர்த்துக்கொள்’ என்று என் அம்மா என்னிடம் சொல்லாத வரை, என்னால் நேர்காணலுக்கு வெளியே வர முடியாது. என் தாயை விட்டு ஓடிப்போகும் திறன் எனக்கு இல்லை. நான் எங்கு ஓடிப் போனாலும், அவள் தான் நான் ஒவ்வொரு நாளும் திரும்ப வேண்டிய வீடு.

டிசம்பர் 24 அன்று டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் சாரா அலி கானின் அத்ரங்கி ரே வெளியானது. படத்தில் சாரா ஒரு தந்திரமான மற்றும் கடினமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தில், சாருவின் கதாப்பாத்திரம் குழந்தைப் பருவ அதிர்ச்சியை மட்டுமல்ல, மற்ற மனநலப் பிரச்சினைகளையும் சமாளிக்க போராடுகிறது.

மேலும் சாரா, தனது பெற்றோரில் அம்ரிதா சிங் மற்றும் சைஃப் அலி கான் ஆகியோரில் தன்னைக் கடுமையாக விமர்சிப்பவர் யார் என்பதை வெளிப்படுத்தினார்.

“அம்மா மிகவும் உணர்ச்சிவசப்படுபவர், எப்போதும் இருப்பார் என்று நான் நினைக்கிறேன். மேலும், என் தந்தை மிகவும் வலிமையான மற்றும் அதிநவீன மனிதர். ஆனால் அம்மா அப்பா இருவரையும் அழவைத்திருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். உங்கள் பெற்றோர் உங்களைப் பற்றி பெருமிதம் கொள்கிறார்கள் என்று அந்த சாதனை உணர்வை உணருவது வித்தியாசமாக இருக்கிறது.

மேலும், என் சகோதரர் இப்ராஹிமின் கூட. கல்லூரியில் இருந்து இப்போது வரை, நான் அவருடைய கோலு மோளு சகோதரி. ஆனால் இப்போது, ​​அவர் என்னைப் பற்றி பெருமைப்படுகிறார். அவர் இதை மற்றவர்களிடமும் கூறுகிறார். அதனால், நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்,” என்றார் சாரா அலி கான்.

சாரா அடுத்ததாக விக்கி கௌஷலுடன் லக்ஷ்மன் உடேகரின் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: My future husband will have to live with my mom says actress sara ali khan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com