/tamil-ie/media/media_files/uploads/2018/07/sri-reddy.jpg)
sri reddy
பட வாய்ப்பு தருவதாக திரையுலகினர், நடிகைகளை தவறான முறையில் பயன்படுத்திக் கொள்வதாக சில மாதங்களுக்கு முன்பு பகீர் கிளப்பினார் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி.
நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என வாய்ப்புக்காக தான் ஏமாந்து விட்டதாகக் கூறினார். அதோடு தெலுங்கு பிரபலங்கள் சிலரின் வாட்ஸ் ஆப் சாட்களையும் வெளியிட்டார். பின்னர் அரை நிர்வாண போராட்டத்திலும் ஈடுபட்டார்.
தெலுங்கு நடிகர்கள் நானி, சந்திப் கிஷன், ராணாவின் தம்பி அபிராம் டகுபதி, திரைக்கதையாசிரியர் கோனா வெங்கட் உள்ளிட்டோர் ஸ்ரீரெட்டியின் இந்த சர்ச்சையில் சிக்கினர்.
தெலுங்கு தேசத்தில் மையம் கொண்டிருந்த இந்த புயல் பின்னர் தமிழ் சினிமா பக்கமும் திரும்பியது. இயக்குநர்கள் முருகதாஸ், லாரன்ஸ், நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோரும் தனக்கு வாய்ப்பு தருவதாகக் கூறி, தன்னை ஏமாற்றி விட்டதாக பரபரப்பைக் கிளப்பினார்.
இந்நிலையில் தற்போது நடிகர் அஜித் பற்றிய பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார்.
”இவரின் படத்தைப் பார்க்காமல் நான் தூங்க மாட்டேன். தமிழில் நம்பர் 1 ஹீரோ. மிகவும் கனிவாக பேசக்கூடியவர். குடும்பத்தை நேசிக்கும் மனிதர். அவரது ரசிகர்கள் மீது அன்பு கொண்டிருப்பவர். சிறந்த தந்தை. சிறந்த கணவன். என்னையும் சேர்த்து கோடிக்கணக்கான பெண்களின் மனதை கொள்ளை கொண்டவர். என் தலை உங்கள் காலில் தல” எனும் அந்த பதிவோடு அஜித்தின் படத்தையும் சேர்த்து வெளியிட்டிருந்தார்.
வழக்கமாக அனைவரின் மீதும் புகார் கிளப்பும் ஸ்ரீ ரெட்டி அஜித் பற்றி இத்தனை பாஸிட்டிவாக பேசியதால் அகம் மகிழ்ந்து போயிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.