Myna Nandhini : விஜய் டிவி-யில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை மைனா நந்தினி. அதோடு சில படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான, ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் கூட நடித்திருந்தார். அதோடு விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘அரண்மனை கிளி’ தொடரில் விஜயா என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜிம் மாஸ்டர் கார்த்திகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் மைனா நந்தினி. ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினாலும், மன உளைச்சலாலும் சில மாதங்களிலேயே தற்கொலை செய்துக் கொண்டார் கார்த்திக். அதன் பிறகு தனது நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார் நந்தினி.
இந்நிலையில் ’நாயகி’, ‘சத்யா’ போன்ற தொடர்களில் நடித்த யோகேஷ்வரனை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார். இவர்களின் திருமணம் சமீபத்தில் நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் மைனா. ரிசப்ஷனில் அவரின் தம்பி பாலு, ‘ரத்தத்தின் ரத்தமே’ என்ற பாடலுக்கு நடனமாட, அதைப் பார்த்து உணர்ச்சி வசப்படுகிறார் மைனா நந்தினி. ”இந்த மாதிரி ஒரு தம்பி கிடைக்க நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் உன் கூடயே பொறக்கணும் பாலு” என்றும் அந்த வீடியோவில் குறிப்பிட்டிருக்கிறார் மைனா நந்தினி.