Advertisment

இது வெறும் ஃப்ரிட்ஜ் இல்லை.. அதுக்கும் மேல - மைனா நந்தினி ஃப்ரிட்ஜ் டூர் அட்ராசிட்டி!

Myna Nandhini Fridge Tour Atrocities இதுவரை வீட்டு வேலைகள் எதுவும் செய்யாமல் இருந்தவர், தன் யூடியூப் சேனலுக்காக ஃப்ரிட்ஜை சுத்தம் செய்திருக்கிறார்.

author-image
WebDesk
May 13, 2021 19:29 IST
Myna Nandhini Fridge Tour Atrocities Tamil News

Myna Nandhini Fridge Tour Atrocities Tamil News

Myna Nandhini Fridge Tour Atrocities Tamil News : எத்தனையோ ஃப்ரிட்ஜ் டூர் பார்த்திருப்பீர்கள். ஆனால், மைனா நந்தினியின் ஃப்ரிட்ஜ் டூரை போல் நிச்சயம் நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். 1 மில்லியன் வியூஸ்களையும் தாண்டி சென்றுகொண்டிருக்கும் நந்தினியின் ஃப்ரிட்ஜ்ஜில் அப்படி என்னதான் ஸ்பெஷல்? நிச்சயம் அசந்து போய்விடுவீர்கள்!

Advertisment
publive-image

இவர் வீட்டில் இருப்பது 2014-ம் ஆண்டு வாங்கிய ஃப்ரிட்ஜ்ஜாம். மற்ற பிரபலங்கள் குறைந்தபட்சம் வீடியோவிற்காக தங்களின் ஃப்ரிட்ஜ்ஜை அழகாக அடுக்கி வைத்திருப்பார்கள். ஆனால், நம்ம நந்தினி வேற லெவல். நம் வீட்டு ஃப்ரிட்ஜ்ஜிற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் இருந்தது.

publive-image

ஃப்ரீசரில் பால், பிறகு காய்கறி மற்றும் பழவகைகள், மீதமான குழம்பு என நாம சாதாரணமாக வீட்டில் பயன்படுத்தப்படும் அதே பொருள்கள்தான் மைனாவின் வீட்டிலும். ஆனால், அதனை அடுக்கி வைத்திருக்கும் விதம் ஆஸம். உண்மையில் அவ்வளவு அழகான ஃப்ரிட்ஜ்ஜா என்று நினைத்துவிடாதீர்கள். அது ஃப்ரிட்ஜ் டூர் அல்ல, ஃப்ரிட்ஜ்  சுத்தம் செய்யும் டூர்.

வெகு நாட்களாக உள்ளேயே இருந்த ஆப்பிள் சைடர்  வினிகர்,காய்ந்த பூக்கள் உள்ளிட்ட பல காலாவதியான பொருள்களை ஃப்ரிட்ஜ்ஜிலிருந்து அகற்றி, சுத்தம் செய்தார் மைனா நந்தினி. பாதம் மஞ்சப்பூத்து யாராவது பார்த்திருக்கிறீர்களா? இந்த வீடியோவில் பார்க்கலாம்.

துணி காயவைக்கும் கிளிப்பெல்லாம் ஏன் ஃப்ரிட்ஜ் உள்ளே இருந்தது என்பது கேள்வி குறியே. சுத்தம் செய்கிறேன் என்ற பெயரில், ஒரு ரேக்கை உடைத்துவிட்டார் நந்தினி. இதுவரை வீட்டு வேலைகள் எதுவும் செய்யாமல் இருந்தவர், தன் யூடியூப் சேனலுக்காக ஃப்ரிட்ஜை சுத்தம் செய்திருக்கிறார். அதற்கு மக்களிடத்திலிருந்து ஏராளமான பாசிட்டிவ் கமென்ட்டுகளும் குவிந்தன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Myna Nandhini
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment