மேடையில் சட்டையை விலக்கி… சீரியல் நடிகைக்கு கணவர் கொடுத்த சர்ப்ரைஸ்!

Myna Nandhini got surprise from her husband yogesh viral photo: மைனா நந்தினிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த யோகேஷ்; வைரல் போட்டோ

சீரியல் நடிகை மைனா நந்தினிக்கு, அவரது கணவர் யோகேஷ் அளித்த சர்ப்ரைஸ் குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சீரியலிகளில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நந்தினி. விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியலில் மைனாவாக நடித்ததன் மூலம் மைனா என்றே அழைக்கப்பட்டு வருகிறார். மைனா, பிரியமானவள், கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, அரண்மனைக்கிளி, டார்லிங் டார்லிங் ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார். கலக்கப்போவது யாரு சீசன் 5 மற்றும் கலக்கல் சாம்பியன்ஸ் உள்ளிட்ட காமெடி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார். சீரியல்கள் மட்டுமல்லாது, கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜா ராணி, நம்ம வீட்டு பிள்ளை, வம்சம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் மைனா நடித்துள்ளார்.

முதல் திருமணத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து கணவனை இழந்த மைனா பின்னர் சீரியல் நடிகர் யோகேஷ் என்பவரை காதலித்து மறுமணம் செய்துக்கொண்டார். தற்போது இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் மைனா, கணவருடன் யோகேஷூடன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். அந்த நிகழ்ச்சியில் ரொமான்ஸ் சுற்றில் மைனாவுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்தார் யோகேஷ். அந்த சர்ப்ரைஸ் என்னவென்றால் தனது காதல் மனைவி மைனாவின் உருவத்தை அவரது நெஞ்சில் டாட்டூவாக வரைந்திருந்தார். இதனை எதிர்ப்பார்க்காத  மைனா கணவரை கட்டிப்பிடித்து கண் கலங்கினார். நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைவரையும் யோகேஷீன் செயல் பிரம்மிப்பில் ஆழ்த்தியது. டாட்டூ குறித்து கேட்டப்போது, மைனா எப்போதும் என்னிடம் உங்களுக்கு என்னை எவ்வளவு பிடிக்கும் என கேட்டுக்கொண்டே இருப்பா, அத காட்டத்தான் இது என கூறினார் யோகேஷ்.

இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள மைனா, “நான் கொஞ்சம் கூட எதிர் பாக்காத சர்ப்ரைஸ் உன்கிட்ட ஐ லவ் யூ. உன்கூட  எப்போதும் கட்டுப்பாடில்லாத காதல்தான். நன்றி சொல்ல கூடாது ஆனால் சொல்லணும்னு தோனுது. நன்றி பாப்பா. நமக்கு ஒரு பொண்ணு இருந்தா உன்ன மாதிரி தான் கணவர் இருக்கனும்னு கடவுளை வேண்டுக்கிறேன்” என மைனா பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. யோகேஷின் செயலை பாராட்டி வரும் ரசிகர்கள், மைனா கஷ்ப்பட்டதுக்கு நல்ல கணவர் கிடைத்துள்ளார் என்றும், இவர்களை வாழ்த்தி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Myna nandhini got surprise from her husband yogesh viral photo

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com