myna nandhini instagram : விஜய் டிவி மைனா என்றால் அறிமுகமே வேண்டாம். தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் குடும்ப பாங்கான கிராமத்து பெண் வேடங்களில் நடித்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தவர். வம்சம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மைனாவிற்கு சிவப்பு கம்பளம் வரவேற்பு கொடுத்தது விஜய் தொலைக்காட்சி தான்.
Advertisment
அந்தவகையில் இவருக்கு பேரும், புகழும் கொடுத்தது சரவணன் மீனாட்சி தொடர் தான். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்தக் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுப்பவர் ‘மைனா’ நந்தினி’இவர் நடிக்கும் சீரியல்கள் டிஆர்பியிலும் நல்ல இடத்தை பெற்றுள்ளேன். சீரியலகளை தவிர நந்தினி டிக்டாக்கிலும் ரொம்ப பிஸி. இவரை டிக் டாக்கில் பின் தொடர்பவர்கள் 1 மில்லியன் பார்வையாளர்கள்.
சினிமா பயணம் நல்லதாக அமைந்தாலும் நந்தினியின் திருமண வாழ்க்கை சொல்லிக் கொள்ளும்படி இல்லை. 2 வருடம் முன் கார்த்திகேயன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில மாதங்களிலேயே கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டதால் அதிர்ச்சியடைந்த மைனா சினிமாவில் முழு கவனம் செலுத்தினார்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நந்தினிக்கும் அவருடன் நடித்து வரும் நடன இருக்குனருக்கும் காதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதை உறுதிப்படுத்தும் வகையில் இருவரும் ஒன்றாக சேர்ந்து பல புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருந்தனர். சமீபத்தில் நடந்த விஜய் டிவி ஆல்யா மானசா- சஞ்சீவி திருமண வரவேற்பு விழாவில் இருவரும் ஜோடியாக கலந்துக் கொண்டனர்.
இந்நிலையில் சென்ற வாரம் நந்தினி மற்றும் யோகேஷுக்கு சிம்பிளாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.