/tamil-ie/media/media_files/uploads/2019/06/Myna-nandhini-second-marriage.jpg)
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியலில் ’மைனா’ கேரக்டரில் நடித்து ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் நந்தினி.
’வெண்ணிலா கபடி குழு’ படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருக்கும் இவர், மேலும் சில படங்களிலும் நடித்துள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜிம் மாஸ்டர் கார்த்திகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் மைனா நந்தினி. ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினாலும், மன உளைச்சலாலும் சில மாதங்களிலேயே தற்கொலை செய்துக் கொண்டார் கார்த்திக்.
இந்த சம்பவத்திற்குப் பிற்கு மீண்டும், சீரியல், ரியாலிட்டி ஷோக்கள் என பிஸியானார் நந்தினி.
இந்நிலையில், தற்போது இவர் சீரியல் நடிகர் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாகவும் அவரே ஒரு நேர்க்காணலில் தெரிவித்துள்ளார்.
இதைப்பற்றி நந்தினி, “எனக்கு யோகேஷை 2013-ல இருந்தே தெரியும். ஆனா கடைசி 1 வருஷமா தான் ரொம்ப க்ளோஸா இருக்கோம். உனக்குன்னு ஒரு லைஃப் வேணாமா, நடந்ததெல்லாம் மறந்துட்டு கடந்து போன்னு சொன்னாங்க. ஆனா எப்போவும் என் கிட்ட கேரிங்கா இருப்பாங்க. ஸோ நான் ஒரு நல்ல ஃபிரெண்டா தான் நினைச்சிட்டு இருந்தேன். ஜனவரி மாசம் அவங்க அப்பா, அம்மா என்ன பாக்க வந்தவங்க, உன்னை பொண்ணு கேட்டு வந்திருக்கோம்ன்னு சொன்னாங்க. எனக்கு பயங்கர ஷாக். ரெண்டு வீட்லயும் பேசிருக்காங்க. கூடிய சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கப் போறோம்” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.