நெல்சன் தீலிப்குமார் டைரக்ஷனில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ஜெயிலர். இந்தப் படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், ஷிவ் ராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
Advertisment
rajinikanth
இந்தப் படம் வெற்றி நடைபோட்டு வசூலை வாரி குவித்துவருகிறது. 2 நாள்களில் படம் ரூ.150 கோடியை தாண்டிவிட்டது என்கின்றனர். மேலும், இதே வேகத்தில் சென்றால் அடுத்த இரு தினங்களில் படம் ரூ.300 கோடி வசூலை நெருங்கிவிடும் என்கின்றனர் பட விநியோகஸ்தர்கள்.
ஜெயிலர் படத்தில் மோகன்லால்
Advertisment
Advertisements
இதற்கிடையில் படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக ஸ்வேதா என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த மிர்ணா மேனன் ரசிகர்களிடையே செம்ம நெருக்கமாக மாறியுள்ளார். அவரை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். படத்தில் வரும் பெரிய டைனோசர பாத்தா மட்டும் தான் பயம் என்ற வசனத்தை மீம் கிரியேட்டர்கள் உருவாக்கி பகிர்ந்து வருகின்றனர்.
Rajinikanth
மிர்ணா மேனன் மோகன் லாலுடன் பிக் பிரதர் என்ற படத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் டனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“