Mysskin Angry Speech on Vishal Thupparivaalan 2 Issue : விஷால் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியானது மிஷ்கின் இயக்கத்தில் உருவான துப்பறிவாளன். இந்த படம் விஷாலுக்கு பெரிய வெற்றியாக அமைந்தது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு துப்பறிவாளன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. விஷாலின் முதல் இயக்கத்தில் இந்த படம் உருவாக இருப்பதாகவும், இதற்கு இளையராஜா இசை அமைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
Proudly Presenting the First Look of #Thupparivaalan2 #KaniyanPoonkundran & #Mano back in action again, this time, "Hunting in London"#Thupparivaalan2FL #VishalDirection1 pic.twitter.com/BFQ5GLpbki
— Vishal (@VishalKOfficial) March 11, 2020
முதல் படம் மிஷ்கின் இயக்கத்தில் வெளியானது. ஆனால் அதன் தொடர்ச்சியாக வெளியாக இருக்கும் இந்த படம் விஷாலின் இயக்கத்திலும் வெளியாக இருப்பதாக அறிவிப்புகள் வந்ததும் சினிமா வட்டாரத்தில் குழப்பம் நிலவியது. செய்தியாளர்காள் சந்திப்பில் எந்த மாதிரியான சூழலில் இந்த படத்தின் கதை எழுதப்பட்டது என்று கூறினார் இயக்குநர் மிஷ்கின். மேலும் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அபாண்டமானவை என்றும், கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
மிஷ்கின் பேச்சு :
இரண்டாவது படம் எழுதினேன். 2018 துப்பறிவாளன் ஒன்று வெளியாகிறது. அப்படத்தின் க்ளைமேக்ஸின் போது பெரிய ஸ்ட்ரைக். ஆட்கள் இல்லை. 3 துணை இயக்குநர்களுடன் இந்த படத்தின் இறுதி காட்சிகளை 6-7 நாட்கள் நான் தனியாக சூட் செய்தேன். நான்கு நாட்கள் எடுக்க வேண்டிய சண்டை காட்சியை ஒரே நாளில் 6 மணி நேரம் எடுத்து முடித்தோம். இறுதி நாளில் எங்கள் கையில் பணம் இல்லை. அப்படி எடுத்தப்படம் தான் துப்பறிவாளன். அதற்கு முன்பு மூன்று விஷாலின் படங்கள் தோல்வியை சந்தித்தது. அதன் பின்பு விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் வெற்றியை பெற்றது. அந்த படத்திற்கு எனக்கு வழங்கப்பட்ட சம்பளம் ரூ.3 கோடி.
"ஒன்றரை வருடங்கள் கழித்து, என்னை மீண்டும் ஒரு கதை எழுத சொன்னார். நிறைய உனக்கு கடன் இருக்கிறது. உனக்கு ஒரு நல்ல கதை எழுதுவோம், இந்தியா அளவில் பேசும் ஒரு விசயமாக இருக்கட்டும். கோஹினூர் வைரம் குறித்து எழுதுவோம். அதன் வரலாறு பெரியது. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதனோடு தொடர்பு இருக்கிறது. இந்த படத்தை மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்வோம் என்று கூறினேன். இந்த கதையை கேட்ட தயாரிப்பாளர் பாப்பி என்பவர் எனக்கு அட்வான்ஸூம் கொடுத்தார். அதன் பின்பு விஷாலுக்கு நான் கதையை கூறினேன். கதையை கேட்டுவிட்டு என்னை கட்டிப்பிடித்து அழுதான். பாத்ரூம் சென்று அழுதுவிட்டு மீண்டும் வந்து கட்டிப்பிடித்து அழுதான். இந்த ஒரு கதை போதும். என்னுடைய அனைத்து கடன்களையும் நான் அடைத்துவிடுவேன்" என்று விஷால் கூறியதாக அவர் குறிப்பிட்டார்.
மூன்று நாட்கள் கழித்து வந்து பாப்பி இந்த படத்தை தயாரிக்க வேண்டாம். நானே இந்த படத்தை தயாரிக்கின்றேன் என்று சொன்னான். அன்னைக்கு ஆரம்பிச்சது எனக்கு தலைவலி. ஏற்கனவே நீ கடன்ல இருக்குற. இந்த படம் பத்தொம்போதுல இருந்து 20 கோடி ரூபாய் வரை செலவாகும். உன்னால் முடியாது. நீ கடனாளியா இருக்க. 2 மாசத்துல ஆக்சன் படம் வருது. ஒரு வேளை அந்த படம் ஓடாம போய்டுச்சுனா உனக்கு இன்னும் கஷ்டம். அதனால இந்த படத்த நீ தொடதேன்னு சொன்னேன். ஆனா கேக்கல. நான் தான் பண்ணுவேன்ன்னு சொன்னான். அப்போ வேற ப்ரொடிசிர் பாக்கலாம்னு சொன்னதுக்கு இல்ல நானே பண்ணுறேன். இது எனக்கு ஹெல்புல்லா இருக்கும்னு சொன்னான்.
இதை துப்பறிவாளன் த்ரீயா எடுத்துக்கலாம். சென்னைல நடக்குற மாதிரி ஒரு கதை சின்ன பட்ஜெட்டுல எடுக்கலாம்னு சொன்னதுக்கு வேணாம் இதே கதை தான் பண்ணனும் என்று விஷால் கூறிதாக கூறினார். நான் யு.கே சென்றதில்லை. இங்கிலாந்து சென்று அங்கே பார்த்து தான் கதை எழுத முடியும் என்று சொல்லி இங்கிலாந்திற்கு சென்று ஸ்கிரிப்ட் எழுதினேன். அதற்கு கொடுக்கப்பட்ட பணம் 7 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய். ஆன செலவு 7 லட்சம் ரூபாய்.
திரைக்கதை எழுதுவதற்கு மட்டும் ரூ. 35 லட்சம் செலவு செய்ததாக கூறினான். அதனை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும். நான் ஒரு இயக்குநர் மட்டுமில்லை. தயாரிப்பாளரின் இயக்குநர். ஒரு ஸ்கிரிப்ட் ரைட்டிங்கிற்காக மட்டும் ஒருவர் ரூ. 35 லட்சம் வாங்கினால் அவன் இயக்குநர் ஆவதற்கே தகுதி அற்றவன் என்று நான் கூறுவேன். ரூ. 13 கோடி ரூபாய் இதுவரைக்கும் செலவு செய்திருக்கின்றேனென்று விஷால் கூறியிருக்கிறார். 32 நாள் நான் ஷூட் செய்திருக்கின்றேன். ஒரு நாளைக்கு ரூ. 15 லட்சம் செலவு ஆனது என்றும் அவர் கூறினார். 32 நாளைக்கு என்று பார்த்தாலும் ரூ. 4 கோடிக்கு தான் கணக்கு வருகிறது. இதையும் அவர் ப்ரூஃப் செய்ய வேண்டும். வெளிநாடுகளுக்கு சென்று படம் எடுத்தால் அங்கே ஒரு தயாரிப்பு நிறுவனம் துவங்க வேண்டும். புற்றூர் அம்மன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கப்பட்டது. அங்கு எல்லாம் வெள்ளைப் பணத்தை மட்டும் தான் செலவு செய்ய முடியும். உங்களுக்கு சந்தேகம் இருக்கிறது என்றால் அவர்களை கேளுங்கள் என்றும் இயக்குநர் மிஷ்கின் கூறினார்.
மிஸ்கினுக்கு ஆதரவாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட ட்வீட். நாங்கள் உங்களை நம்புகின்றோம். நீங்கள் எப்போது தயாரோ அப்போது உங்களுக்கு வேல்ஸூம் தயாராக இருக்கும் என்று தங்களின் ஆதரவு கரத்தை நீட்டியுள்ளது வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேசனல்.
#Mysskin Sir, We always believe in you and your script, #Vels is ready when you are ready !!!
- @isharikganesh #DrIshariKGanesh #VelsFilmInternational #KaruppurajaVellairaja https://t.co/SiBKhWa5XW
— Vels Film International (@VelsFilmIntl) March 12, 2020
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.