கார் ஓட்டிக் கொண்டு இதைச் செய்யலாமா? இயக்குனர் மிஷ்கின் மீது ஒரு புகார்!
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் நாடாளுமன்ற செயலாளரும் எழுத்தாளருமான அருணகிரி’ கார் ஓட்டிக் கொண்டே மிஷ்கின் பேசுவதை கண்டித்து. அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் நாடாளுமன்ற செயலாளரும் எழுத்தாளருமான அருணகிரி’ கார் ஓட்டிக் கொண்டே மிஷ்கின் பேசுவதை கண்டித்து. அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
Mysskin who breaks traffic rules: MDMK party writer complained
காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டன் தயாரித்து இயக்கிய 'கடைசி விவசாயி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, யோகிபாபு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில், இயக்குநர் மிஷ்கின் இந்தப் படத்தைப் பாராட்டி தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Advertisment
அதில்’ மிஷ்கின் கார் ஓட்டிக் கொண்டே ‘நூறு ஆண்டுகளில் எடுக்கப்பட்ட மிகச்சிறந்த படம். தயவு செய்து இந்தப் படத்தை பாருங்கள். இந்தப் படம் மகா உன்னதமான படம். ஒரு தவறு கூட இந்தப் படத்தில் இல்லை என்று சொல்வேன். இந்தப் படத்தில் பணிபுரிந்தவர்களின் கால்களுக்கு நான் முத்தமிடுவேன்'' என்று பேசியுள்ளார்.
பலரும் மிஷ்கின் பாராட்டி பேசும் வீடியோவை லைக் செய்து வருகின்றனர்.
Advertisment
Advertisements
இந்நிலையில்’ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் நாடாளுமன்ற செயலாளரும் எழுத்தாளருமான அருணகிரி’ கார் ஓட்டிக் கொண்டே மிஷ்கின் பேசுவதை கண்டித்து. அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
எழுத்தாளர் அருணகிரி (போட்டோ: Facebook)
இதுபற்றி எழுத்தாளர் அருணகிரி’ தனது பதிவில் கூறியிருப்பதாவது:
தவறான வழிகாட்டுதல்.. அப்பட்டமான சட்டமீறல்.. வழக்கு பதிவு செய்யுங்கள்..
காலையில் சன் நியூஸ் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு இருந்தேன். நடிகர் விஜய் சேதுபதி நடித்த கடைசி விவசாயி என்ற படத்தைப் பாராட்டி, இயக்குனர் நடிகர் மிஷ்கின் ஒரு காணொளி பதிவு செய்து இருக்கின்றார். அதை ஒளிபரப்பினார்கள்.
எப்படி? அவர் கார் ஓட்டிக்கொண்டே பக்கவாட்டில் அலைபேசியை வைத்து பதிவு செய்து இருக்கின்றார். அது பகல் அல்ல. இரவு நேரம். நல்ல இருட்டு. இவர் கூலிங் கிளாஸ் அணிந்து இருக்கின்றார். அதுவே மடமை. அடுத்து, கார் ஓட்டுகின்றார். இடதுபுறம் உள்ள அலைபேசியைப் பார்த்துப் பேசிக்கொண்டே கார் ஓட்டிக் கொண்டு போகின்றார்.இடையிடையே சாலையைப் பார்த்துக் கொள்கின்றார்.
இது அப்பட்டமான சட்டமீறல் என்பது மிஷ்கினுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும், தெரிந்தே தவறு செய்து இருக்கின்றார்.
எனவே,போக்குவரத்து காவல்துறை உடனடியாக அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். அல்லது யாரேனும் ஒரு பொதுநல வழக்கு உரைஞர் இயக்குநர் மிஷ்கின் மீது குற்றச்சாட்டு கொடுத்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
அவர் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை என்றால், அலைபேசியைப் பார்த்துப் பேசிக்கொண்டே ஓட்டுவது குற்றம் அல்ல என்று, போக்குவரத்து காவல் ஆணையர் அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு எழுத்தாளர் அருணகிரி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“