நாய் சேகர் ஹீரோவை கலாய்த்த ராதிகா: ஆனா இந்த பதிலடியை எதிர்பார்க்கவே இல்லை!
நாய் சேகர் படத்தின் ஹீரோ சதீஷை கலாய்த்து ராதிகா ஒரு ஜாலியான கேள்வி கேட்க, அதற்கு சதீஷ், ரசிகர்கள் யாருமே எதிர்பார்க்காத ஏன், நடிகை ராதிகாவே எதிர்பார்க்காத ஒரு பதிலை சொல்லி அசத்தியுள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்குனர் கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில், நகைச்சுவை நடிகர் சதீஷ் நடித்துள்ள நாய் சேகர் படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. நாய் சேகர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சன் டிவியில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில், நாய் சேகர் படத்தின் ஹீரோ சதீஷ் மற்றும் நடிகர்கள் கலந்துகொண்டனர்.
Advertisment
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக காணொலி வழியாக கலந்துகொண்ட நடிகை ராதிகா சரத்குமார், நாய் சேகர் படத்தின் ஹீரோ சதீஷை கலாய்த்து ஒரு ஜாலியான கேள்வி கேட்க, இதை சற்றும் எதிர்பாராத சதீஷ், ரசிகர்கள் யாருமே எதிர்பார்க்காத ஏன், நடிகை ராதிகாவே எதிர்பார்க்காத ஒரு பதிலை சொல்லி அசத்தியுள்ளார்.
நாய் சேகர் படத்தின், புரமோஷன் நிகழ்சியில் பங்கேற்ற நடிகை ராதிகா சரத்குமார், எனக்கு சதீஷ் கிட்ட ஒரு முக்கியமான கேள்வி கேட்கணும்ணு இருக்கிறேன். ஏனென்றால் இது ரொம்ப முக்கியமான கேள்வி. இந்த படத்தில் நீங்கள் ஹிரோவாக நடிக்கிறீர்கள், அதற்கு என்னுடைய வாழ்த்துகள். ஆனால், எனக்கு ஒரு சிறிய கேள்வி இருக்கிறது. நீங்கள் ஹீரோவாக வந்ததுனால, யாருக்கு அதிகமான பாதிப்பு இருக்கும்ணு நினைக்கிறீங்க? நான் மக்களைப் பற்றி சொல்லல.” என்று ஜாலியாக சொல்ல இதைக் கேட்டு சதீஷ் விழுந்து விழுந்து சிரித்தார்.
தொடர்ந்து பேசிய ராதிகா, “ரஜினி, கமல் வேண்டாம், விஜய், அஜீத் அவங்ககூட வேண்டாம். நீங்கள் யாருக்கு போட்டியா இருப்பீங்க” என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த சதீஷ், “முதலில் அக்கா உங்களுக்கு நன்றி, உங்களுடைய வாழ்த்துகளுக்கு அன்பு. இந்த கேள்விதான் கொஞ்சம் ஒரு மாதிரி இருக்குது. இருந்தாலும், அங்கே நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த நடிகர்களைப் பார்த்து என்ன ப்ரோ நாம போட்டியினு சொல அளவுக்கு வொர்த் இல்லை. மக்களுக்கு புடிக்கிற மாதிரி அடுத்து படங்கள் வருது. நாம அதை மக்களுக்கு புடிக்கிற மாதிரி செய்தாலே போதும். போட்டியெல்லாம் யாரும் இல்லை அக்கா சதீஷ் கையெடுத்து கும்பிட்டு சரண்டாராகிவிட்டார். வேணும்னா, நான் யாரை சொல்லலாம். சரத் சார சொல்லிக்கிறேன். சரத் சாருக்குதான் போட்டி அக்கா” என்று ஜாலியாக சொல்லி இருக்கிறார்.
நாய் சேகர் ஹீரோவை கலாய்த்த ராதிகாவுக்கு அவரே எதிர்பார்க்காத அளவுக்கு நான் சரத்சாருக்குதான் போட்டி என்று சொல்லி அசத்தியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"