/tamil-ie/media/media_files/uploads/2019/09/sachin-21.jpg)
Naam Iruvar Namakku Iruvar
Naam Iruvar Namakku Iruvar : விஜய் டெலிவிஷனில் ஒளிப்பரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் தனது இரண்டாவது ஆசையை சொல்லி மாயனை கிடுகிடுங்க வைத்துள்ளார் தேவி.
கடந்த வாரம் முழுவதும் ரவுடி தேவியாக வலம் வந்துக் கொண்டிருந்த தேவி, மாயனிடம் இப்போது தனது இரண்டாவது ஆசையை கூறி இருக்கிறார். மாயனை கண்டாலே பிடிக்காது , விலகி ஓடும், தேவியின் அம்மா மற்றும் மாமாவை நேசிக்க வேண்டும், அன்பு காட்ட வேண்டும் என்பதே தேவி, மாயனிடம் கேட்டிருக்கும் இரண்டாவது ஆசை.
தேவி கேட்டால் மாயன் இல்லை என்ற சொன்னதாக சரித்திரமே இல்லை. அதே போல் தான் , தேவியின் இரண்டாவது ஆசையான அன்பு செய்ய வேண்டும் என்பதை உடனே நிரூபிக்க களத்தில் இறங்கி விட்டார் மாயன். மாமாவின் காலை அமுகுவது, அத்தைக்கு தைலம் தேய்ப்பது என மாயனின் அட்டகாசங்கள் பயங்கர அலப்பறையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரம் முழுவதும் ரசிகர்கள் பார்க்க இருப்பது இதை தான்.
kanmani today :
வளர்மதியை மொத்த குடும்பமும் தேடுகிறது. எங்கே போனார் கண்மனி என்பது ஆகாஷ் உட்படம் யாருக்கும் தெரியவில்லை. எத்தனையோ பிரச்சனைகளுக்கு அப்புறம் ஆகாஷ் - வளர்மதி கல்யாணம் நடந்து முடிந்தது. ஆனால் முதலிரவில் வளர், ஆகாஷிடம் மோசமாக நடந்துக்கொள்ள தகாத வார்த்தைகளால் பேச, இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ் வளர்மதியை கன்னத்தில் அறைந்து விடுகிறார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத வளர்மதி இரவே வீட்டை விட்டு எங்கேயோ செல்கிறார். காலை விடிந்ததும் வளரின் அம்மா, கிருஷணவேனி உட்பட அனைவரும் வளர்மதியை தேடுகின்றனர். ஆனால் அவரை காணவில்லை. உடனே பதற்றத்தில் கிருஷ்ணவேனி மருமகன் ஆகாஷிடம் சென்று எல்லாவற்றையும் கேடக் இரவு நடந்த உண்மையை போட்டுடைகிறார் ஆகாஷ். இனிமேல் நடக்க போவது என்ன?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.