Naam Iruvar Namakku Iruvar Raksha in new serial Tamil News
Naam Iruvar Namakku Iruvar Raksha in new serial Tamil News : ஒரே போன்ற கதைக்களம் என்றாலும், சீரியலை பொறுத்தவரையில் போட்டிக்குப் பஞ்சமில்லை. அதே சலித்துப்போன மாமியார், மருமகள் சண்டை, கணவரைத் தக்க வைத்துக்கொள்வதற்கான போராட்டம் என இப்போது வரும் சீரியல்களின் ஒன் லைன் என்னவோ ஒன்றுதான் என்றாலும், அதற்கான டைட்டிலும், ப்ரோமோக்களும் எப்படியும் மக்களை ஈர்த்துவிடுகிறது.
Advertisment
அதிலும் சில சீரியல்கள் பல பாகங்களாக எடுக்க ஆரம்பித்துவிட்டனர். இந்த ட்ரெண்டை உருவாக்கியது விஜய் டிவிதான். ராஜா ராணி 2, கனா காணும் காலங்கள் 2, ஆபிஸ் 2, மௌன ராகம் 2 என இரண்டு பாகங்களாக வெளிவந்திருக்கும் தொடர்களின் பட்டியலும் நீண்டுகொண்டு போகிறது. அதில் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருவது, நாம் இருவர் நமக்கு இருவர் தொடர்.
Advertisment
Advertisements
இந்த குறிப்பிட்ட தொடரில் ஹீரோ டபுள் ஆக்ஷன். அவர்களுக்கு ஏற்ற ஜோடிகளும் உண்டு. அந்த வரிசையில் முக்கிய கதாபாத்திரத்தில், ரக்ஷா, ரேஷ்மி என இரண்டு நடிகைகள் நடித்து வந்தனர். கொரோனா பரவல் அதிகமானதால் அதன் அடிப்படையில் லாக்டவுன் போடப்பட்டது. இதனால், தொடர்களுக்கான ஷூட்டிங் அனைத்தும் பாதிலேயே நிறுத்தப்பட்ட நிலையில், ரக்ஷா, ரேஷ்மி இருவருமே சீரியலை விட்டு விளக்கப்பட்டனர். ரக்ஷவின் சொந்த ஊர் பெங்களூர் என்பதால் அவர் தன் வீட்டிற்கே சென்றுள்ளார்.
பிறகு இரண்டரை மாதம் கழித்து ஷூட்டிங் இருப்பதாகக்கூறி அழைக்கப்பட்டிருக்கிறார். ஆனால், அப்போது கொரோனா பரவல் தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் அதிகம் இருந்ததால், ரக்ஷவின் வீட்டில் அவரை போகவேண்டாம் என்று கூறிவிட்டார்களாம். அதுமட்டுமில்லாமல், கர்நாடகாவிலிருந்து தமிழகம் வர இ-பாஸ் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இருந்ததால், ரக்ஷவினால் வர முடியவில்லை.
ஆனால், இப்போது முழு லாக்டவுன் முடிந்து, மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியுள்ளதால் ரக்ஷாவிற்கு மீண்டும் அழைப்பு வரும் என்று வெயிட் செய்தவருக்கு எந்தவிதமான தகவலும் வந்தடையவில்லை. அதே சீரியலில் நடிக்கும் ரச்சிதா மீண்டும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். ஆனால், ரக்ஷவை இன்னும் காணோமே என்று அவரை தேடியவர்களுக்கு வேறொரு தொடர் மூலம் மாஸாக அறிமுகமாகவிருக்கிறார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகப்போகும் ‘அன்பே சிவம்’ என்ற புதிய தொடரில் ரக்ஷா நடிக்க இருக்கிறார். இந்த அப்டேட்டுடன், தான் முன்பைவிட இப்போது எடை கொஞ்சம் அதிகரித்து சப்பியாக மாறிவிட்டதாகவும், சீக்கிரமே பழையபடி சந்திப்பதாகவும் கூறியிருக்கிறார் ரக்ஷா. இதனால், இவருடைய ரசிகர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil