naam iruvar namakku iruvar 2 serial news in tamil: சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சியாக வலம் வரும் விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் – 2’. இந்த சீரியலின் முதல் சீசன் கடந்த 2018ம் ஆண்டு முதல் ஒளிபரப்பப்பட்டு வந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக அதற்கு சீக்கிரமே எண்டு கார்டு போடும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், சீரியலின் அனைத்து கதைக்களமும் மாற்றப்பட்டு ஒரு புதிய கதைக்களம், புதிய பிரச்சனை, புதிய சாவல் என புது அம்சங்களோடு தற்போது மிரட்டி வருகிறது இந்த சீரியலின் சீசன் -2. முதல் சீசன் போலவே சீசன் -2கும் சீரியல் ரசிகர்கள் தங்கள் பேராதரவை கொடுத்து வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாகவே ‘நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2′ சீரியல் விறுவிறுப்பின் உச்சத்தில் உள்ளது என்றால் நிச்சயம் மிகையாது. ஏனென்றால், இந்த சீரியலில் வரும் முத்துராசை கொன்றது யார் என்ற கேள்விக்கு விடையை கண்டுப்பிடிக்க அனைவரும் முயலவே சீரியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. பிறகு இந்த கேள்விக்கு 2 வாரங்களுக்கு பிறகு விடை கிடைத்திருந்தாலும், தற்போது வரை பல அதிரடியான திருப்பங்களை சந்தித்து வருகிறது.
இப்போது, முத்துராசை கொன்றது காயத்திரி தான் என்று உண்மை தெரிய வந்ததால் அதிலிருந்து தனது குடும்பத்தை காப்பாற்ற முழு சொத்தையும் மாசாணிக்கு எழுதி கொடுத்து விட்டார் மாயன். இதனால் மாயன் மற்றும் அவரது குடும்பத்தினரை, மாசாணி வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். இங்கு யாரும் எதிர் பார்க்காத திருப்பமாக மாயனின் சகோதரன், மாறன் புதிதாக மாஸ் என்ட்ரீ கொடுத்துள்ளார். எனவே, இனி கதை எப்படிப் போகும், என்னவாக இருக்கும் என்கிற ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
தற்போது மாறன் மாஸ் என்ட்ரீ கொடுக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் அதை சமூக வலைதள பக்கங்களில் அதிகம் பகிர்ந்தும் வைரலாக்கியும் வருகின்றனர்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil