முத்துராசு கொலை பழியை ஏற்ற மாயன் கைது.. காரணம் என்ன?
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் முத்துராசு கொலை வழக்கில் மாயன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுகிற புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் முத்துராசு கொலை வழக்கில் மாயன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுகிற புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் முத்துராசு, ஐஸ்வர்யாவை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டு அடித்து துண்புறுத்தி வந்த நிலையில், திடீரென யாரோ ஒருவரால் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்படுகிறான். இதனால், இந்த சீரியல் பரபரப்பான திருப்பத்தை அடைந்துள்ளது.
Advertisment
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் வில்லனாக வலம் வந்த முத்துராசுவை மர்ம நபர் சுட்டு கொன்றதால், அவனை யார் கொலை செய்திருக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. முத்துராசு கொலையான பிறகு, மறுநாள் காலை அவனுடைய செல்போன், ஒரு லெட்டர் உடன் ஐஸ்வர்யாவிடம் கிடைக்கிறது. முத்துராசுவைக் கொன்றது யார் என்று போலீசார் விசாரணை செய்துவரும் நிலையில், கதையில் பலர் மீது சந்தேகம் எழுகிறது. அதனால், முத்துராசுவை கொன்றது யாராக இருக்கும் என்ற குழப்பமும் திரில்லிங்கும் சேர்ந்துள்ளது.
இந்த சூழலில்தான், கொலையான முத்துராசின் அம்மா வடிவு கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் வீட்டுக்கு வந்து மாயனை விசாரிக்கிறது. முத்துராசு கொலையில் மாயன் மீது தான் அதிகமான சந்தேகம் எழுந்ததால் போலீஸ் மாயனை கைது செய்கிறது. இப்படி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் விறுவிறுப்பாக செல்கிறது.
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ஹீரோவாக மாயன் கதாபாத்திரத்தில் நடிக்கும் மிர்சி செந்தில் போலீஸ் உடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். மேலும், அந்த புகைப்படம் குறித்து அவர் குறிப்பிடுகையில், “நீங்கள் மாயன் முத்துராசுவைக் கொன்றிருப்பான் என்று நினைக்கிறீர்களா? போலீஸ் மாயனை கைது செய்து காவலில் எடுத்துள்ளார்கள். போலீஸ் செய்தது சரியா? என்பதை வருகிற எபிசோடை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை தொடர்ந்து, மிர்சி செந்தில், சீரியலில் மாயன் நீதிமன்ற அறையில் இருக்கிற ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், “நீதி மன்ற காட்சி, முத்துராசுவைக் கொன்றது யார்? பழியை ஏற்றான் மாயன். ஆனால், அவர்கள் உண்மையான கொலைகாரனை கண்டுபிடிப்பார்கள். நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் வருகிற எபிசோடை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் முத்துராசு கொலை வழக்கில் மாயன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுகிற புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. முத்துராசுவைக் கொன்றது யார் என்று தெரிந்துகொள்ளும் எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் எகிறியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”