/tamil-ie/media/media_files/uploads/2019/09/Rashmi-Jayaraj.jpg)
நாம் இருவர் நமக்கு இருவர் தாமரை என்கிற ராஷ்மி ஜெயராஜ்
Naam Iruvar namakku Iruvar Thamarai: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் டாக்டர் அரவிந்துக்கு ஜோடியாக நடிப்பவர் தாமரை. எல்லா சீரியல் ஹீரோயின்களையும் போல, பொறுமை, சாந்தம், இன்னசெண்ட், மாமியார் மனம் கோணாமல் நடந்துக் கொள்ளும் கதாபாத்திரம். பெண்கள் மத்தியில் தாமரைக்கும், அவர் அணிந்து வரும் புடவைகளுக்கும் ஏக போக லைக்ஸ் மழை!
சரி தாமரையைப் பற்றி சில சுவாரஸ்ய தகவல்களை தெரிந்துக் கொள்வோம் வாருங்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2019/09/67171405_149731309461302_4814684289111975138_n.jpg)
தாமரையின் நிஜப்பெயர் ராஷ்மி ஜெயராஜ். அக்டோபர் 2, 1992-ல் கர்நாடகாவின், பெங்களூரில் பிறந்து வளர்ந்த ராஷ்மி, அங்கேயே கல்லூரி படிப்பையும் முடித்தார். பின்னர் ‘ஜோதே ஜோதேயலி’ என்ற கன்னட சீரியல் மூலம் தனது சின்னத்திரை வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழில் ராஷ்மி அறிமுகமானது, சன் டி.வி-யில் ஒளிபரப்பான ‘விதி’ எனும் சீரியலில் தான்.
பிக்பாஸ் இல்லத்தில் எனக்கு நடந்த கொடுமை: ஜாங்கிரி மதுமிதா பேட்டி
தனது குழந்தை பருவத்தில், கார்ட்டூன் சேனல்களைப் பார்ப்பது ராஷ்மிக்கு மிகவும் பிடித்த ஒன்றாம். இதற்கான தன் சகோதரனுடன் நிறைய சண்டைப் போட்டிருக்கிறாராம். ஒரு நாள், அவர் தனது அம்மாவிடம் ஐந்து ரூபாய் கேட்டிருக்கிறார். அவர் கொடுக்க மறுக்கவே, தனது சகோதரனின் பள்ளி புத்தகங்களை விற்று, ஸ்நாக்ஸ் வாங்கியிருக்கிறார். இப்படி சின்ன வயதில் நிறைய வேடிக்கையான விஷயங்களை அரங்கேற்றியிருக்கிறார் ராஷ்மி.
8 ஆம் வகுப்பு படிக்கும் போது தேர்வில் தோல்வியடைந்த காரணத்தினால் எலி மருந்து சாப்பிட்டிருக்கிறார். பள்ளி நாட்களில், படிப்பை விட விளையாட்டில் அதிக கவனம் செலுத்தியதே இதற்குக் காரணமாம். மாவட்ட மற்றும் மாநில அளவில் ’த்ரோ பால்’ டீமின் கேப்டனாக இருந்த ராஷ்மி, 7-ம் வகுப்பு படிக்கும் போது, மாநில அளவில் நீளம் தாண்டுதல் போட்டிக்கும் தேர்வு செய்யப்பட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.