/tamil-ie/media/media_files/uploads/2019/09/sachin-9.jpg)
naam iruvar namakku iruvar today
naam iruvar namakku iruvar today : விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் பெரும்பாலான மக்களின் ஃபேவரெட். மாயனாக கலக்கிக் கொண்டிருக்கும் சரவணன் மீனாட்சி புகழ் மிர்ச்சி செந்திலுக்கு ஏகப்பட்ட பெண் ரசிகைகள். அதுமட்டுமில்லை இவருக்கு ஜோடியாக தேவி கதாபாத்திரத்தில் களம் இறங்கியுள்ள அறிமுக நடிகையின் டிக் டாக் வீடியோக்கள் இணையத்தின் அதி வைரல்.
naam iruvar namakku iruvar today promo:
மாயன் தேவி ஜோடி பொருத்தம் கேட்டகவே வேண்டாம் அவ்வளவு அட்டகாசமாக இருக்கும். அதிலும் தேவியை மாயன் நெருங்குவது, காதலை பிழிவது,கனவு காண்பது, அசடு வழிவது என மாயன் கதாபாத்திரம் படு ஜோர். இதுவரை படித்த நிதானமான, தெளிவான பெண்ணாக சுற்றி வந்த தேவி திடீரென்று நேற்று ரெளடி தேவியாக மாறி இருக்கிறார். கருப்பு சேலை வாயில் வெற்றிலை பாக்கு, பெரிய சைஸ் குங்குமம் என அச்சு அசல் சொரணக்காகவே மாறி அதகளப்படுத்துகிறார் தேவி. ஷாக் நமக்கு மட்டுமில்லை தேவியின் மாமாவுக்கும் தான்.
Yaaradi Nee Mohini today: இத்தனை வருஷமா வென்னிலாவை திருமணம் செய்வார் என எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் முத்து மாமா. ஸ்வேதாவை தான் திருமணம் செய்ய இருப்பதாக வீட்டில் நடுவில் நின்றப்படி உரக்க கத்துகிறார்.
இதனால் வென்னிலா உள்ளுக்குள்ளே குமுறுகிறார். இதைப்பார்த்து வழக்கம்போல் ஸ்வேதா ஆனந்தப்படுகிறார். ஆம் எத்தனை வருஷம் தான் முத்து மாமா கல்யாணம் பண்றதையே ஒரு சீரியலா ஓட்டூவிங்க பாஸ்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.