Serial News in Tamil : ஆர்ஜே செந்தில் இரட்டை வேடத்தில் நடித்து வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. சரவணன் மீனாட்சி காலத்தில் இருந்து இவருக்கு கணிசமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஆதரவால் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ஏதோ கல்லாக் கட்டும்படி இருக்கிறது.
Azhagu : ஹை.. இந்த குட்டி சித்தியை சித்தீதீதீ…ன்னு கூப்பிடலாமா?
மாயனா மதுரை பாஷை பேசி நடிச்சு வரும் செந்தில், ஒரு செகண்ட் கூட கேரக்டரில் இருந்து வெளியில் வராம நல்லா நடிச்சுட்டு இருக்கார். மாயன் படிக்காதவன் என்று தேவியின் அப்பா சும்மா சொல்லிக் காண்பிக்கிறார். உனக்கு ஒத்து வருமா தேவி.. நாளைக்கு உங்க ரெண்டு பேருக்குள்ள எதுவும் பிரச்சனை வராம இருக்கணும்னு அப்பா சொல்ல,
தேவி மாயனுக்கு பாடம் எடுக்கிறேன்னு கிளம்பிட்டா... மாயனா கையில் புத்தகம் எடுத்தாலே தூக்கம் வரும் கேஸ். தெவிக்கிட்டே ஆசையா முத்தம் கேட்டால் படிச்சியான்னு கேட்கிறாள். சரி மொத்தமா முதலிரவுன்னு கேட்டால், எழுதினியான்னு கேட்கிறாள் மொத்தமா கேட்டதன் விளைவா இப்போ புதுசா ஒரு குண்டு போட்டு மாயன் வயிற்றை கலங்கடிக்கிறாள் தேவி.
டெஸ்டுல் பாஸ் ஆனால்தான் ஃபர்ஸ்ட் நைட்டுன்னு கண்டிஷனா சொல்லிட்டா தேவி. சரி.. இனிமேல் தேவிகிட்டே படிச்சா வேலைக்கு ஆகாதுன்னு அரவிந்தை வளர்த்த பாம்பே டாடிகிட்டே படிக்கப் போறேன்னு பேக்கை மாட்டிகிட்டு கிளம்பிட்டான். பாம்பே டாடிகிட்டே போனா இந்த குஸ்தி டாடி குடைச்சல் குடுக்கறார். அதை படிச்சியாடா.. இதை எழுதினியடா.. இதை சேர்த்து சொல்லு, அதை பிரிச்சு சொல்லுன்னு ஸ்கேலை எடுத்து கையில் பொட்டுன்னு போடறார். எங்க வந்தார் குஸ்தின்னு கேட்கவா முடியும்.. அவர் இருக்கற இடத்துக்கு இவன்தான் வந்து இருக்கான்.
சட்டைக்கு ஒரு கண்ணாடி.. கண்ணுக்கு ஒரு கண்ணாடியா.. ரெண்டு கலரில் வேஷ்டியா.. என்னடா வேஷம் இதுன்னு சொல்லி சொல்லி அடிக்கறாருங்க குஸ்தின்னு தெவிக்கிட்டே சொன்னாலும், தேவி டெஸ்ட்டுடா டெஸ்ட்டுன்னு சொல்லி பயமுறுத்தறா. கொஸ்டின் பேப்பரை பார்த்தா... படிச்சது ஒண்ணுமே அதுல இல்லை. ஏங்க என்னங்க கொஸ்டின் பேப்பர் தயாரிச்சு இருக்கீங்க என்று கேட்டு, ஏண்டா நீ வேற எதிர்பார்த்தியான்னு தேவியின் சந்தேகப் பார்வை தலை குனிய அவைக்குது. இப்படியே கட் பண்ணி விற்றானும்.. இல்லேன்னா இந்த டெஸ்ட்டு செல்லாது அடுத்த டெஸ்ட்டுன்னு சொல்லிடுவாளேன்னு பயபுள்ள பவ்யமா எழுதறான்.
Nayagi Serial : டேய்…சுவரேறி குதிச்சு சொம்பு திருட வந்தவனா நீ?
இல்லீங்க.. நான் எழுதறேன்னு உட்கார்ந்து எழுதியவன் பாஸாயிடுவானான்னு குடும்பமே ஆவலா இருக்க, பிரசவ வார்டுக்குள் மனைவியை விட்டுட்டு நடப்பாங்களே அப்படி இங்கிட்டு அங்கிட்டுன்னு மாயன் நடந்துகிட்டு இருக்கான். பேப்பரைத் திருத்திட்டு கதவைத் திறக்கறா தேவி. அக்கா அத்தான் பாஸா.. அக்கா அத்தான் பாஸாயிட்டாரான்னு தங்கச்சி ஒரு பக்கம், தாமரை ஒரு பக்கம்னு கேட்க..உம்முன்னு நின்ன தேவி மாயன் என்று சொல்லி கேப் விட்டுட்டு பாஸாயிட்டான்னு சொல்றா. ஒண்ணுமே படிக்கலை.. பயபுள்ள எப்படி பாஸாகி இருக்கும்?
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"