By: WebDesk
Updated: December 14, 2019, 09:02:24 PM
Naam Iruvar Namakku Iruvar
Naam Iruvar Namakku Iruvar : விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் பல திருப்பங்களைக் கொண்டுள்ளது. ஆனந்தியை திருமணம் செய்துக் கொள்ள மாயனிடம் நிறைய டிமாண்ட் செய்கிறான் கார்த்தி.
தங்கை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, மாயனும் கார்த்தி சொல்லும் அனைத்தையும் கேட்கிறான். கடைசியாக திருமணம் நடக்கும் போது, மாயன் மண்டபத்திலிருந்தால் தான் ஆனந்தி கழுத்தில் தாலி கட்ட மாட்டேன் என பிளாக் மெயில் செய்கிறான். மாயனும் கார்த்திக்கின் காலில் விழுந்து இது மட்டும் வேண்டாம் என்கிறான். அப்போது மாயனின் அப்பா ரத்தினம் இதைப் பார்த்து நொடிந்துப் போகிறார். தன் மகன் இத்தனை நாட்களாக கார்த்திக்கிடம் மாட்டிக் கொண்டு பட்ட கஷ்டங்களை எல்லாம் நினைத்து உள்ளுக்குள் பொறுமுகிறார்.
ஜெயலலிதாவின் கதையாக எடுக்கப்பட்ட இணையதள தொடருக்கு தடை கோரிக்கை..
தாலி கட்டும் நேரம் வந்ததும், மாயன் வந்தால் தான் இந்தக் கல்யாணம் நடக்கும் என்கிறார் ரத்தினம். கார்த்திக் திரு திருவென முழிக்க, அவனைப் பற்றிய உண்மைகளை மண்டபத்தில் அனைவர் முன்பும் போட்டுடைத்து விடுகிறார். ’கார்த்திக்கு உன் மேல பாசம் எல்லாம் இல்ல. மாயன பழி வாங்க, அவன் உன்ன பகடை காயா பயன்படுத்துறான்’ என ஆனந்தியிடம் கூறுகின்றனர்.
அப்பாவா வருங்கால கணவன் கார்த்திக்கா என்ற நிலையில், கார்த்திக் பக்கமே நிற்கிறாள் ஆனந்தி. ’எல்லாரும் சேர்ந்து ஆசிர்வாதம் பண்ணுங்க, இல்லன்ன இங்க இருந்து போயிருங்க’ என ஆனந்தி சொன்னதும், குடும்பமே அதிர்ந்து போகிறது. தாலி கட்டி முடித்ததும், ரத்தினத்தை மரியாதை இல்லாமல் பேசுகிறான் கார்த்திக். இதனால் ஆத்திரமடைந்த மாயனும், அரவிந்தும் கார்த்திக்குடன் சண்டையிடுகிறார்கள்.
இனி உனக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என குடும்பத்தினர் சொன்னதால் மனம் உடைந்து போகிறாள் ஆனந்தி. அவளை இனி குடும்பத்தினரோடு சேர விடக் கூடாது என்று எண்ணும் கார்த்திக், இனி நான் தான் உனக்கு எல்லாமே, நான் மட்டும் தான் உன் கூட கடைசி வரைக்கும் இருப்பேன் என்றெல்லாம் கூறி அவள் மனதை மாற்றுகிறான். இதற்கிடையே 500 எபிசோட்களைக் கடந்த நாம் இருவர் நமக்கு இருவர் தொடரின் வெற்றிப் பயண கொண்டாட்டமும் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகவிருக்கிறது.