Naam Iruvar Namakku Iruvar : நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் தேவி படுன்னு சொன்ன உடனே, ஆசையா, ஜாலியா பெட்டில் படுக்க போனான் மாயன். டேய்னு ஒரு அதட்டல். யாரு நம்ம தேவிதேன். என்னங்க என்று மாயன் கேட்க, இனிமேலாவது பொறுப்பா நடந்துக்கோ. என்று தேவி ஆரம்பிக்க, டாக்டர் தம்பி சொல்ற மாதிரியே சொல்றாளேன்னு மாயன் மைண்ட் வாய்ஸ். எல்லா பொண்டாட்டிக்கும் புருஷன் தன் கையால் சேலை வாங்கிக் கொடுக்கணும்னு ஆசை இருக்கும். அதுதான், அதேதான்னு டாக்டர் தம்பி சொன்னது தான்னு மறுபடியும் மாயன் மைண்ட் வாய்ஸ்.
புயலாய் மாறிய தென்றல்: வேற யாரு? நம்ம அழகம்மை தான்…
புருஷன் சம்பாதிச்சுக் கொண்டு வர பாணத்தில் குடும்பம் நடத்தணும்னு கனவு இருக்கும். எனக்கும் அதே மாதிரிதான்னு தேவி சொல்ல. இது கொஞ்சம் புதுசா இருக்கேன்னு பேசிக்கறான் மாயன். அதனால இனிமேலாவது பொறுப்பா நடந்துக்கோ.. ஓட்டலை ஒழுங்கா நடத்தி சம்பாதிக்கற வழியைப் பாரு. என்ன நான் சொல்றது புரிஞ்சுதா இல்லையான்னு கேட்கறா. புரிஞ்சு போச்சு. புரிஞ்சு போச்சுன்னு சொல்லிகிட்டே எழுந்து நின்னு கையை குடுங்க என்று கேட்கிறான்.
எதுக்குடா எதுக்குன்னு தேவி கேட்க...குடுங்க கையை குடுங்க சொல்றேன்னு கேட்கிறான் அவளும் கையை நீட்ட, குட்நைட் படுங்க என்று சொல்லிவிட்டு நடக்கிறான். டேய்.. நான் இங்கே பேசிகிட்டு இருக்கேன், நீ பாட்டுக்கு போனா என்னடா அர்த்தம்னு கேட்கிறாள். நமக்கு எழுதி வச்சது தரைதேன்னு சொல்லிக்கிட்டு போறான். டேய் என்னடா நீ பாட்டுக்கு கீழே படுக்கப் போறேன்னு தேவி கேட்கிறாள்.
ஏங்க முதல்ல டெஸ்ட் டெஸ்ட்டுன்னு என்னை தரையில் படுக்க வச்சீங்க. இப்போவாவது ரெஸ்ட் கிடைக்கும்னு பார்த்தா புதுசா ஒரு டிவிஸ்டை குடுக்கறீங்க. எப்படியும் கடைசியில கீழத்தான் படுக்க சொல்லுவிய. அதான் கீழேயே படுத்துக்கறேன். உங்களை பத்தி எனக்குத் தெரியுங்க என்று சொல்கிறான் மாயன்.
கோலிவுட் கொரோனா: வைரஸ் தாக்குதல்களை பேசிய ஐந்து தமிழ் படங்கள்!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"