Naam Iruvar Namaku Iruvar : விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்’ தற்போது விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது.
Advertisment
மாயனின் தங்கை ஆனந்திக்கும், மாயனின் மனைவி தேவியின் தம்பி கார்த்திக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு வேண்டுமென்றே 100 பவுன் நகை, பணம், கார் என மாயனிடம் நிறைய டிமாண்ட் செய்து வந்தான் கார்த்திக். ஒருபுறம் அக்காவின் கணவர், மறுமுறம் வருங்கால மனைவியின் அண்ணன், என கொஞ்சமும் சிந்திக்காமல் மாயனுக்கு நிறைய தொல்லைகளைக் கொடுத்து வருகிறான்.
மாயனும் கார்த்திக் தரும் ஒவ்வொரு பிரச்னைகளையும் சமாளித்து வருகிறான். இறுதியில் திருமண நாளில் பெரிய செக் வைக்கிறான் கார்த்திக். அதாவது திருமணத்தின் போது, மாயன் மண்டபத்தில் இருக்கக் கூடாது என்றும், மீறி இருந்தால், நான் உன் தங்கை கழுத்தில் தாலி கட்ட மாட்டேன் என்றும் திட்ட வட்டமாகக் கூறுகிறான். மாயன் எவ்வளவோ சொல்லிப் பார்த்து கடைசியில் கார்த்திக் காலில் விழுகிறான். ஆனாலும் அதற்கெல்லாம் செவி சாய்க்க மறுக்கிறான் கார்த்திக்.
Advertisment
Advertisements
இதனால் திருமணத்தன்று, மண்டபத்தை விட்டு வெளியேறி சிவன் கோயில் உட்கார்ந்து, இதை நினைத்து புலம்பிக் கொண்டிருக்கிறான் மாயன். இந்த விஷயம் மாயனின் அப்பா, ரத்தினவேலுவுக்கு தெரிய வருகிறது. இருப்பினும் அவர் வேறு யாரிடமும் கூறாமல், இவ்வளவு கஷ்டப்பட்ட தன் மகனால் கல்யாணத்தில் கலந்துக் கொள்ள முடியவில்லையே என நினைத்து நினைத்து, உள்ளுக்குள் அழுகிறார்.
மண்டபத்தில் அனைவரும் மாயனை தேடுகிறார்கள். ஃபோனும் ஸ்விட்ச் ஆஃபில் உள்ளதால், அவர்களுக்கு ஒருவித பதட்டம் ஏற்படுகிறது. இதற்கிடையே மாப்பிள்ளையை மணவறைக்கு அழைத்து வர மூத்த மச்சான் மாயனைக் கேட்கிறார்கள். அவனைக் காணவில்லை என்பதால், அரவிந்திடம் மாப்பிள்ளையை அழைத்து வருமாறு கூறுகிறார்கள். உண்மை தெரிந்த ரத்தினவேலு என்ன செய்வார்? பொறுத்திருந்து பார்ப்போம்.