'நான் ஆணையிட்டால்...' என்ற எம்.ஜி.ஆர் பாட்டு சரியாக எழுதவில்லை என பிழை கூறிய பிரபல கவிஞருக்கு வாலி பதில் கொடுத்தது எப்படி தெரியுமா?
'நான் ஆணையிட்டால்... அது நடந்துவிட்டால்' என்ற பாடல் வரிகள் மிகவும் அபத்தமாக எழுதியிருப்பதாக கூறிய உடுமலை நாராயண கவிக்கு வாலி நல்ல எடுத்துக்காட்டு கொடுத்து அதனை புரிய வைத்துள்ளார்.
ஒரு நாள் வாலியை சந்தித்த உடுமலை நாராயண கவி, ”என்ன வாலி, நான் ஆணையிட்டால் பாட்டு எழுதி இருக்க அப்புறம் அது நடந்து விட்டால் என்று அப்படினா என்னது யார் ஆணையிடுவா? ஆணையிடுற இடத்தில இருக்கிறவன் எப்படி அது நடந்து விட்டால்” என்று கேட்டுள்ளார்.
மேலும், “ அவன் சொன்னால் நடக்கும் என்கிற இடத்தில் இருக்கிறவன் தான் ஆணையிடுவான் அது என்ன அபத்தமா நீ பாட்டு எழுதி இருக்குன்னு” கேட்டதாக வாலி தெரிவித்தார்.
வாலி சில நிமிடங்கள் எதுவும் பதில் பேசாமல் இருந்து விட்டு, பின்னர் உங்கள் மகன் என்ன செய்கிறார் என்று கேட்டுள்ளார்.
அதற்கு உடுமலை, “ எங்க நம்ம பேச்சை கேட்கிறான்,நம்ம பேச்சை அவன் கேட்கிறதே இல்லை”ன்னு சொன்னாறாம்.
அதற்கு வாலி, ”நீங்க ராமகிருஷ்ணனுடைய அப்பாதானே நீங்க ஆணையிடுற இடத்தில தானே இருக்கீங்க தந்தை ஆணையிட்டு தனையன் கேட்கலையே அதனால அது நடந்து விட்டால் தான்” அதற்கு அர்த்தம் கூறினாறாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“