/tamil-ie/media/media_files/uploads/2018/08/naan-seitha-kurumbu-jhv.jpg)
naan seitha kurumbu , நான் செய்த குறும்பு
கயல் படத்தின் மூலம் அறிமுகமான பிரபல நடிகர் சந்திரன் நடிக்க இருக்கும் “ நான் செய்த குறும்பு ” படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நான் செய்த குறும்பு படத்தின் நாயகன்:
‘கயல்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சந்திரன். அதைத் தொடர்ந்து ‘ரூபாய்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது சந்திரன், ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’, ‘கிரஹணம்’, ‘பார்ட்டி’, ‘டாவு’ உட்பட பல படங்களில் நடித்து வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2018/08/naan-seitha-kurumbu.jpg)
இந்நிலையில் தற்போது ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு ‘ நான் செய்த குறும்பு ’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் கதாநாயகன் சந்திரன் வயிற்றில் குழந்தை வளர்வது போலவும், அவருக்கு பிரசவம் நடப்பது போலவும் காட்சியாக்கப்பட்டுள்ளது.
The first look of my next “Naan Seidha Kurumbu” ❤ pic.twitter.com/oULv1pkbd3
— Chandran (@moulistic) 5 August 2018
இந்தப் படத்தை மகா விஷ்ணு என்பவர் தயாரித்து இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் சந்திரனுக்கு ஜோடியாக அஞ்சு குரியன் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 5ம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.