நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த ‘நடிகையர் திலகம்’ படத்திற்கு தணிக்கைக்குழு உறுப்பினர்கள் யு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு தெலுங்கு மற்றும் தமிழில் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்றும் தெலுங்கில் ‘மகாநதி’ என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்தில் சாவித்திரி கதாப்பாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான், சாவித்திரியின் படங்களுக்கு கதாசிரியராக இருந்த அலூரி சக்ரபாணி கதாப்பாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் மற்றும் நிருபராக சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் பிற கதாப்பாத்திரங்களில் விஜய் தேவரகொண்டா, நாக சைதன்யா, உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படத்தை, வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதனைத் தணிக்கை செய்த சென்சார் குழு, இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படங்களுக்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. வரும் ஏப்ரல் 11ம் தேதி தமிழில் உருவான ‘நடிகையர் திலகம்’ வெளியாகிறது.