தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 10-ம் தேதி நடைபெற உள்ளதால் அன்றைய தினம் தமிழ் சினிமா ஷூட்டிங் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 10-ம் தேதி நடைபெற உள்ளதால், அன்றைய தினம் அனைத்து சங்கங்களும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. மேலும், நடிகர் சங்க பொதுக் குழுவில் முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளதால் செப்டம்பர் 10-ம் தேதி தமிழ் சினிமா ஷூட்டிங் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் (நடிகர் சங்கம்) 67வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 10-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் தலைவர் எம். நாசர் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. எனவே, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (FEFSI) ஆகிய அமைப்புகள் படப்பிடிப்புகளை ரத்து செய்துள்ளன.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில், துணைத் தலைவர் கருணாஸ், 2022-2023ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை வாசித்து, தணிக்கை செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் எதிர்கால பொருளாதார திட்டமிடல் குறித்து பொருளாளர் கார்த்தியும், பொதுச்செயலாளர் விஷால், நடிகர் சங்கத்தின் எதிர்கால நலத்திட்டங்கள் குறித்தும் விளக்கிப் பேசுகிறார். துணைத் தலைவர் பூச்சி முருகனின் நன்றியுரையுடன் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நிறைவு பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் அங்கம் வகிக்கும் முன்னணி நடிகர்கள், நடிகைகள் மற்றும் நாடகக் கலைஞர்களும் பங்கேற்கவுள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழுவில் கலந்து கொள்ளும் நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களது உறுப்பினர் அட்டையுடன் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று நடிகர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிடப் பணிகள் இன்னும் முடிவடையாததாலும், கட்டுமானப் பணிகள் 5 ஆண்டுகளாக நடைபெற்று வருவதாலும், கட்டிடம் கட்டுவதற்கான திட்டங்களை உறுப்பினர்கள் எடுத்துரைக்க உள்ளனர். மேலும், சில உறுப்பினர்கள் தற்போதைய அணியில் அதிருப்தியில் உள்ளதால ஒரு சிலருக்கு இடையே கேள்விகள் எழுவதற்கு வாய்ப்புள்ளது. ஃபெப்சி-ஆல் தயாரிக்கப்பட்ட தமிழ் திரைப்படங்களில் தமிழ் நட்சத்திரங்கள் பணியாற்றுவதற்கான சமீபத்திய கட்டுப்பாடுகள் குறித்தும் இந்த கூட்டத்தின்போது விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், செப்டம்பர் 10-ம் தேதி தமிழ் சினிமா படப்பிடிப்புகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் பெரிய படங்கள் எதுவும் பாதிக்கப்படப் போவதில்லை, தற்போது பெரிய படங்களின் படப்பிடிப்புகள் எதுவும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.