/indian-express-tamil/media/media_files/FdakqBMEgbpJ7kSFSgnJ.jpg)
தே.மு.தி.க தலைவரும், பிரபல நடிகருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் அவரது நினைவிடத்தில் பொதுமக்கள், நடிகர்கள் எனப் பலர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேற்று (ஜன.9) விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர்கள் விஷால், ஆர்யா அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி செலுத்தியப் பின் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், “கேப்டன் அரசியல் மற்றும் திரை உலகில் மிகப்பெரிய மனிதர். ஒருவர் மறைந்த பிறகுதான் அவரை கடவுள் என்று கூறுவார்கள். ஆனால் விஜயகாந்த்
அண்ணன் உயிரோடு இருக்கும்போதே அவரை கடவுள் என்றுதான் அழைப்பார்கள்.
அவர் கட்சி அலுவலகத்தில் எப்போதும் 4 முதல் 6 பேர் கொண்ட சமையல் குழுவினர் சமைத்துக் கொண்டே இருப்பார்களாம். அங்கு சென்றவர்கள் யாரும் பசியோடு திரும்பிச் செல்லக்கூடாது என்பதற்காக, அவர்களை அழைத்து உணவு கொடுப்பது அவரின் வழக்கம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் என்றார்.
திரைத்துறை, பொதுப்பணித்துறை என்று அனைத்திலும் தலைசிறந்த மனிதர் அவர். அண்ணனின் இறுதி ஊர்வலத்தில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. அதற்காக என்னை மன்னித்து விடுங்கள். அந்த குற்றவுணர்ச்சி எனக்கு சாகும்வரை இருக்கும்.
ஒரு தொண்டனாக, ரசிகனாக அவரின் குடும்பதிற்கு கடமைபட்டுள்ளேன். கேப்டன் நம்முடன் இல்லை என்றாலும் என்றும் நம் மனதில் அவர் வாழ்ந்து கொண்டே இருப்பார். மக்களின் மனதில் சமூக சேவையின் மூலம் அவர் இடம்பிடித்து விட்டார் என்று கூறினார்.
தொடர்ந்து, நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைக்க பரிசீலனை செய்யப்படும். அண்ணன் பெயர் இல்லாமல் இன்றைய நடிகர் சங்க கட்டடமே இல்லை. நடிகர் சங்கத்துக்காக அவரின் உழைப்பு சாதரணமானது அல்ல. நடிகர் சங்கம் சார்பில் வரும் 19-ம் தேதி அஞ்சலி கூட்டம் நடைபெறும்” என்று தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.