Nadigar Sangam Elections 2019 Live Updates : தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு மைலாப்பூரில் அமைந்திருக்கும் புனித எப்பாஸ் பள்ளியில் தொடங்கியது. கடந்தமுறை விஷாலின் பாண்டவர் அணி, சரத்குமார் மற்றும் ராதாரவிக்கு எதிராக களம் இறங்கியது. ஆனால் இன்று நடைபெற இருக்கும் தேர்தலிலோ நடிகர் விஷாலின் பாண்டவர்கள் அணியை எதிர்த்து, நடிகர் மற்றும் இயக்குநருமான பாக்கியராஜ் மற்றும் ஐசரி கணேஷின் சுவாமி சங்கரதாஸ் அணியினர் களம் இறங்கினர்.
கடைசி நேர குளறுபடிகள்
23ம் தேதி (இன்று) நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறும் அதே கல்லூரியில், எஸ்.வி.சேகர் நாடகத்தினை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கு முறையான அனுமதிச் சீட்டினை பெற்றுவிட்டதாகவும் கூறினார். ஆனால் விஷால் தரப்பினரோ, இல்லை நீங்கள் புக் செய்திருப்பது மண்டபத்தினை, ஆனால் நாங்கள் கல்லூரியில் தேர்தல் நடத்த உள்ளோம் என்று அந்த சர்ச்சைக்கு தற்காலிகமாக முற்றுப் புள்ளி வைத்தார். ஆனால் இன்று தேர்தலோ மைலாப்பூரில் நடைபெற்றது.
மேலும் படிக்க : சரிகிறதா விஷால் சாம்ராஜ்யம்? திமுக vs அதிமுக களமாகும் நடிகர் சங்க தேர்தல்!
Live Blog
Nadigar Sangam Elections 2019 Live Updates : ஆயிரக்கணக்கான நடிகர்கள் நடிகைகள் பங்கேற்கும் இந்த தேர்தல் குறித்த அனைத்து அப்டேட்களையும் உடனே பெற்றுக் கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்
நடிகர் சங்கத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. முன்னணி நடிகர்- நடிகைகள் பலர் வந்து வாக்களித்தனர். மொத்தம் 1587 பேர் வாக்களித்ததாக சுவாமி சங்கரதாஸ் அணியினர் கூறினர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தை தமிழ் நடிகர் சங்கம் என பெயர் மாற்றம் செய்யவேண்டும் என பலரும் கூறிவந்த நிலையில், நடிகர் பிரபு இதே பெயரே நீடிக்க வேண்டும் என்றார். தபால் வாக்குகள் ரஜினிகாந்த் உள்பட பலருக்கு கிடைக்கவில்லை என்கிற குறைபாட்டுடன் தேர்தல் நடந்திருக்கிறது. வாக்கு எண்ணிக்கை உடனடியாக நடைபெறாது. நீதிமன்ற அனுமதியுடன் பின்னர் நடைபெறும்.
தபால் வாக்குகள் சரியான நேரத்தில் சென்றடையாமல் இருப்பது வருத்தத்திற்குரியது. இதில் சூழ்ச்சி ஏதும் இல்லை. ரஜினியின் ஓட்டு எல்லா உறுப்பினர்களின் ஓட்டைப் போலவும் முக்கியமான ஓட்டு. அடுத்த முறை இது போன்ற பிரச்சனைகள் எழாமல் தடுக்க வேண்டும். வெற்றி பெற வாழ்த்துகள் என்று அவர் கூறினார்.
நடிகர் சுந்தர்.சி, நடிகர் சந்தானம், நடிகர் ஆர்யா போன்றோர்கள் தங்களின் வாக்குகள் பாண்டவர் அணிக்கே என்று கூறி வருகின்றனர். வாக்குகள் மட்டுமல்லாமல் முழு ஆதரவையும் அவ்வணிக்கே அவர்கள் தருவதாகவும் கூறியுள்ளனர். இதுவரை 1034 நபர்கள் வாக்களித்துள்ளனர். அஜித், சூர்யா போன்ற பெரிய நட்சத்திரங்கள் யாரும் இது வரை வாக்களிக்க வரவில்லை. அதே போன்று நடிகைகளில் பலரின் முகமும் இந்த பக்கம் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்குப்பதிவுகள் கூடுதலாக இருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருப்பதாக பாண்டவர் அணியின் விஷால் அறிவித்துள்ளார். நடிகர் சங்கத்திற்கான கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டவுடன், கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு கல்வி நிதி உதவிகள் மற்றும் வயதானவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க திட்டமிட்டுள்ளதாக நடிகர் விஷால் கூறினார்.
ரஜினிகாந்திற்கு தபால் வாக்கு தாமதமாக சென்றது குறித்து முறையாக அஞ்சல் துறையிடம் புகார் அளித்துள்ளோம் என்று கூறியுள்ளார். அவர் மீது வைக்கப்பட்ட குற்றசாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பியதற்கு, நிரூபித்தால் தானே பதில் கூற இயலும் என்று கூறினார். நடிகர் சங்கம் கட்டி முடித்தவுடன், முதியவர்களுக்கான முதியோர் இல்லம் கட்ட திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
நடிகர் சங்கத் தேர்தலுக்காக ஊடகம் ஆற்றும் கடைமை மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. ஆனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடக்கும் பிரச்சனைகளுக்கும் நீங்கள் முக்கியத்துவம் கொடுங்கள் என்றும் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள், மக்கள், மாணவர்கள் குளங்களை தூர்வாறும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதையும் நீங்கள் மக்கள் மத்தியில் கொண்டு போய் சேருங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
நடிகர் சங்க தேர்தலில் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமானோர் வாக்களித்து வருகின்றனர். இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. எங்கள் அணிக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. நாங்கள் தந்த வாக்குறுதிகள் உண்மையானவை என்பதை சங்கத்தினர் உணர்ந்துள்ளனர். எங்களின் வாக்குறுதிகள் மிக விரைவில் நிறைவேற்றப்படும்.
யார் நல்லது செய்வார்களோ அவர்களுக்கு தான் என்னுடைய ஓட்டு என்று நகைச்சுவை நடிகர் செந்தில் அறிவித்துள்ளார். யார் நல்லவர்களோ அவர்களுக்கு நீங்கள் வாக்களியுங்கள் என்று கூறினார். மேலும் இரண்டரை வருடங்களில் கட்டிடம் முழுமையாக கட்டி முடிக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் நடைபெற்று வரும் நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிப்பதற்கான புனித எப்பாஸ் பள்ளிக்கு வருகை புரிந்தார் நடிகர் விஜய். அவர் வருகையின் போது அப்பகுதியில் ரசிகர்கள் நிறைய பேர் கூடியதால், காவல்துறையினர் பாதுகாப்புடன் வாக்களிக்க உள்ளே வந்தார் விஜய்
மயிலாப்பூரில் அமைந்திருக்கும் புனித எப்பாஸ் பள்ளியில் காலையில் இருந்து நடிகர் சங்க தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 895 வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. 80% வரை வாக்குகள் பதிவாகலாம் என்று காலையில் நடிகை குஷ்பு கூறியது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியதே பாண்டவர் அணி தான். சட்டப்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்க வேண்டிய தேர்தல் சரியான முறையில் நடைபெற்று வருகிறது. 6 மாதங்கள் தாமதமானதிற்கு முறையான காரணங்களை நாங்கள் ஏற்கனவே அறிவித்துவிட்டோம். 3500 நபர்களில் ஒவ்வொரு ஓட்டும் முக்கியமானது தான். சென்னையை தாண்டி இருக்கும் அனைத்து கலைஞர்களுக்கும் தபால் வாக்குகள் செல்ல வேண்டும் என்று தேர்தல் அதிகாரி எடுத்த முடிவின் பெயரிலேயே வாக்குகள் அனுப்பப்பட்டன. ரஜினிக்கு தாமதமாக தபால் வாக்கு சென்றததிற்காக நான் மிகவும் வருந்துகிறேன். தபால் துறையின் கையிலும், தேர்தல் அதிகாரியின் கையிலும் தான் அனைத்தும் இருக்கிறது என்று நடிகர் நாசர் தெரிவித்தார்.
நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்காக போட்டியிடுகிறார் பாண்டவர் அணியைச் சேர்ந்த நாசர். தற்போது அவர் பேசுகையில் சட்டப்படி தான் தேர்தல் நடைபெற்று வருகிறது என்றும், கால தாமத்திற்கான காரணங்களை முறையாக அறிவித்துவிட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் ரஜினிக்கு தபால்வாக்கு தாமதமாக சென்றதிற்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டார் நாசர்.
தடைகளை தாண்டி, ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெறுகிறது - நடிகை ரோகினி
தேர்தல் முதலில் நடைபெறுமா என்ற சந்தேகம் தான் அனைவருக்கும் இருந்தது - ரமேஷ் கண்ணா
ஒரே நாளில் தேர்தல் ஏற்பாடுகளை மிகவும் வேகமாகவும், சிறப்பாகவும் செய்துள்ளனர். தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை நண்பர்களுக்கு நன்றிகள் - சின்னி ஜெயந்த்
உண்மை, தர்மம் எங்கு இருக்கிறதோ அது தான் ஜெயிக்கும். தேர்தலின் முடிவும் அப்படித்தான் இருக்கும் என நடிகை குஷ்பு சுந்தர் பேட்டி. கடந்த முறை தேர்தல் நடத்தப்பட்ட ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்திருக்கும் புனித எப்பாஸ் பள்ளியில் இந்த தேர்தல் நடைபெறுகிறது என்று அவர் கூறினார். எம்.பி., எம்.எல்.ஏ தேர்தலில் கூட 100% வாக்குகள் பதிவாவதில்லை. ஆனால் நிச்சயமாக 80% வாக்குகள் பதிவாகும் என்று அவர் கூறியுள்ளார்.
நடிகர் சங்கக் கட்டிடம் மற்றும் இதர தேவைகளுக்காகவே கடந்த முறை நடிகர் சங்கத் தேர்தல் நடத்தப்பட்டது. அம்முறை அனைவரும் ஒன்றாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டனர். ஐசரி சாரும் சரி, விஷாலும் சரி அனைவரின் எண்ணமும் ஒன்று தான். ஏதோ சிறு தவறான புரிதல்கள் காரணமாக இந்த தேர்தல் நடைபெற்று வருகிறது. அனைவரும் ஒன்றாக ஆலோசனை நடத்தியிருந்தால் இந்த தேர்தலை தவிர்த்திருக்கலாம். பிரச்சாரத்தின் போது ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொள்வது வேடிக்கையாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
நடிகர் சங்க கட்டிடத்திற்கு தான் இவ்வளவு போராட்டம் என நடிகர் விசால் கூறியுள்ளார். தற்போது எப்பாஸ் பள்ளிக்கு வந்துள்ள அவர், எதிரணிகளுக்கு தன்னுடைய வாழ்த்துகளை பதிவு செய்ததுடன், இந்த தேர்தல் எந்தவிதமான அசம்பாவிதங்களுக்கும் ஆளாகாமல் முறையாக நடைபெறும் என்றும் கூறினார்.
நடிகர் ரஜினி வாக்களிக்க முடியாதது தங்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் அளிப்பதாக சுவாமி சங்கரதாஸ் அணியின் தலைவர் ஐசரி கணேஷ் கூறியுள்ளார். ரஜினிக்கே தபால் வாக்கு செல்லவில்லை என்றால் மற்றவர்களுக்கு எப்படி செல்லும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சுவாமி சங்கரதாஸ் அணிக்கு வெற்றி வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருப்பதாக நடிகை காயத்ரி ரகுராம் கூறியுள்ளார். மேலும் அனைவரும் வந்து வாக்களித்தால் நன்றாக இருக்கும் என்றும் தன்னுடைய கருத்தை கூறியுள்ளார். காலையிலேயே தேர்தல் நடைபெறும் இடத்திற்கு சுவாமி சங்கரதாஸ் அணி வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
தலைவர் பதவிக்காக நடிகர் எம்.நாசர் போட்டியிடுகிறார். துணைத் தலைவர் பதவிக்காக நடிகர் கருணாஸ் போட்டியிடுகிறார்.
பொதுச்செயலாளர் பதவிக்காக நடிகர் விஷால் போட்டியிடுகிறார்.
பொருளாளர் பதவிக்காக நடிகர் கார்த்தி போட்டியிடுகிறார்.
அதே போன்று செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்காகவும் இன்று தேர்தல் நடத்தப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights