/indian-express-tamil/media/media_files/2025/08/28/screenshot-2025-08-28-182307-2025-08-28-18-23-29.jpg)
அறிமுக இயக்குனரான பாலாஜி தரணீதரன் எழுதி, இயக்கிய பிளாக் காமெடி படம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். இந்த படத்தை வி.எஸ்.ராஜ்குமார், லியோ விஷன் ஸ்டூடியோ பேனரில் தயாரித்திருந்தார். விஜய் சேதுபதி, காயத்ரி சங்கர், விக்னேஷ்வரன் பழனிசாமி, ராஜ்குமார், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் 2012 ம் ஆண்டு நவம்பர் 30 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது.
பாசிடிவ் விமர்சனங்களைப் பெற்று, பெரிய அளவில் ஹிட்டான இந்த படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, மராத்தி, குஜராத்தி ஆகிய 6 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்திற்கு வேத் சங்கர் மற்றும் சித்தார்த் விபின் ஆகியோர் இசை அமைத்திருந்தனர்.
திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன், கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் சமயத்தில் தலையில் அடிபட்டு குறிப்பிட்ட சில நினைவுகளை மட்டும் இழந்து விடும் இளைஞரின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை காமெடி கலந்து சொல்லப்பட்டிருப்பது தான் படத்தின் கதை. ஒளிப்பதிவாளர் பிரேம் குமாரின் நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை மையமாகக் கொண்டது தான் படத்தின் கதை.
வாரணம் ஆயிரம் படத்தில் அசிஸ்டென்ட் கேமிராமேனாக வேலை செய்து கொண்டிருந்த போது பிரேம்குமார், திருமணத்திற்கு இரண்டு நாட்கள் இருந்த நிலையில் தலையில் அடிபட்டு, குறிப்பிட்ட சில நினைவுகளை இழந்தார். இந்த சம்பவத்தை திரைக்கதையாக எழுதி தான் இந்த படத்தை உருவாக்கி உள்ளனர். இந்த படத்தில் நினைவுகளை இழந்த ஹீரோ விஜய் சேதுபதி பேசும் நீண்ட வசனத்தை சரியான வார்த்தைகளுடன் எழுதுவதற்கு 2 மாதங்கள் எடுத்துக் கொண்டதாம்.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்த நீர்பறவை படத்துடன், இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது. செப்டம்பர் மாதமே ப்ரிவ்யூ ஷோ திரையிடப்பட்ட நிலையில் பல காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு, நவம்பர் 30 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. ப்ரீமியர் ஷோ முடிந்த பிறகு 25 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டு, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை வெளியிட்டனர்.
இந்த படத்தில் நடித்த ஒருவர் தான் பக்ஸ் என்கிற பகவதி பெருமாள். அவர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியபோது சூப்பர்ஸ்டாருடன் கிடைத்த ஒரு அனுபவத்தை பற்றி பேசியிருந்தார்.
"நான் ஒரு முறை ரஜினி சார் என் பக்கத்தில் நின்றுகொண்டிருக்கும் போது அவர் வயிற்றில் லேசாக செல்லமாக தட்டி, நீங்கள் ஏன் சார் எங்களை படம் வெற்றி பெற்ற போது அழைத்து வாழ்த்தவே இல்லை என்று கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே, அப்படியே என்ன படம் என்று கேட்டார். நான் உடனே 'நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' படம் பிடிக்குமா என்று கேட்டேன். அதற்க்கு அவர், அமாம் பார்த்தேன் நல்ல படம் என்றார். நான் உடனே பிறகு ஏன் எதுவுமே சொல்லவில்லை என்று கேட்டேன்.
அதற்க்கு அவர், அயோ பிஸியாக இருந்துருப்பேன் என்று கூறினார். நான் உடனே அவரிடம், சார் நீங்கள் பிஸியாக இருந்தால் 'சூது கவ்வும்' 'பீட்ஸா' படங்களை பாராட்டினீர்கள். பிறகு ஏன் எங்கள் படத்தை மற்றும் பாராட்டவில்லை என்று கேட்டேன். அதற்க்கு அவர் சிரித்துக்கொண்டே, இமயமலைக்கு சென்றிருப்பேன் என்று கூறினார் என்னிடம். என்னால் அவரிடம் இப்படி கேசுவலாக பேசியதை நம்பவே முடியவில்லை." என்று சிரித்துக்கொண்டே பகிர்ந்தார் நடிகர் பக்ஸ்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.