Advertisment
Presenting Partner
Desktop GIF

சமந்தாவை பிரிந்து 2 ஆண்டுகள்; இரண்டாவது திருமணத்திற்கு தயாரான நாக சைதன்யா?

இரண்டாவது திருமணம் செய்ய உள்ளாரா நடிகர் நாக சைதன்யா? வணிக குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை மணமுடிக்க உள்ளதாக தகவல்

author-image
WebDesk
New Update
Naga Chaitanya

இரண்டாவது திருமணம் செய்ய உள்ளாரா நடிகர் நாக சைதன்யா? வணிக குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை மணமுடிக்க உள்ளதாக தகவல்

நடிகர் நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்துக் கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

நடிகர் நாகர்ஜூனாவின் மகனான நாக சைதன்யா தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார். நாக சைதன்யா ஜோஷ், ஏ மாயா சேசவே, 100% லவ், பிரேமம், வெங்கி மாமா, லவ் ஸ்டோரி, பங்கர்ராஜூ, லால் சிங் சத்தா மற்றும் பல போன்ற பல்வேறு பிரபலமான படங்களில் நடித்துள்ளார்.

ஏ மாயா சேசவே படத்தில் நடித்தப்போது நடிகை சமந்தாவை காதலித்தார் நாக சைதன்யா. பின்னர் இருவரும் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக 2021 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர்.

நாக சைதன்யா விவாகரத்து பெற்ற பின்னர், பிரபல நடிகை சோபிதா துலிபாவை காதலிப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் இருவரும் அந்த செய்தியை மறுத்துவிட்டனர்.

இந்தநிலையில், நாகர்ஜூனா தனது மகனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரைத்துறையை சாராத வணிகக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை நாக சைதன்யா திருமணம் செய்துக் கொள்ள உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாக சைதன்யா கடைசியாக வெங்கட் பிரபுவின் அதிரடி திரில்லர் படமான கஸ்டடியில் நடித்தார். இப்படத்தில் கிர்த்தி ஷெட்டி, அரவிந்த் சுவாமி, பிரியாமணி மற்றும் சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நாக சைதன்யா தற்போது தெலுங்கில் தூதா என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Samantha Ruth Prabhu Naga Chaitanya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment