1963-ம் ஆண்டு ஏ.சி.திரிலோகச்சந்தர் இயக்கத்தில் வெளியான படம் நானும் ஒரு பெண். எஸ்.எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி, ரங்காராவ், எம்.ஆர்.ராதா, நாகேஷ் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்திருந்தன்ர் . படம் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. பாடல்களும் ஹிட் ஆனது.
Advertisment
இந்தப் படத்தில் நாகேஷ் விஜயகுமாரிக்கு அண்ணனாக நடித்திருப்பார். வெகுளியாக இருப்பார். அப்படி இருக்க படத்தில் முக்கிய காட்சியில் சீரியஸான காட்சியில் நாகேஷ் நடித்தது குறித்து அவர் ஒரு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்தப் படத்தில் விஜயகுமாரியின் திருமணம் நிற்கும் சூழல் ஏற்படுகிறது. இந்த சீனில் நடிக்க மனோரம்மா, , விஜயகுமாரி மற்றவர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தனர்.
நானுன் அப்போது செட்டிற்கு வருகிறேன். காட்சி பற்றி கேட்ட பின் திரிலோக் சாரிடம் சென்று நான் விஜயகுமாரிக்கு அண்ணனாக இருக்கிறேன். நான் அந்த காட்சியில் கட்டாயம் நடிக்க வேண்டும் என்றேன். அதற்கு திரிலோக் சார் மறுத்து, நீ காமெடியன் இந்த காட்சியில் நடித்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள். சிரிச்சிடுவாங்க என்றார். இல்லை எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க என்று கேட்டு டயலாக் எதுவும் இல்லாமல் நானாக பேசி நடித்தேன்.
பின்னர், கட் சொன்ன உடன் திருலோக் சார், அங்கிருந்த கேமரா மேன் செட்டில் இருந்தவர்கள் அனைவரும் கைத்தட்டி பாராட்டினார்கள் என்று நாகேஷ் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news