தடுப்பூசி எடுத்துக்கொண்டும் நடிகை நக்மாவுக்கு கொரோனா

Nagma Tested Covid 19 Positive: கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட நடிகை நக்மாவிற்கு கொரோனா உறுதி

 Actor Nagma Latest News In Tamil: கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகை நக்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ள நிலையில் பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகையும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான நக்மாவுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட சில நாட்களுக்கு பிறகு பாசிட்டிவ் என வந்ததால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டேன். தடுப்பூசி செலுத்திக் கொண்டர்வகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என பதிவிட்டுள்ளார். நடிகை நக்மா ஏப்ரல் 2ஆம் தேதி கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார். தனது முதல் டோஸுக்குப் பிறகு, காய்ச்சல், இருமல் மற்றும் சளி இருந்து வந்ததாக அவர் முன்பு டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் பலரும் தொற்று பாதிக்கப்பட்டதாக கூறி வருகின்றனர். ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சில வாரங்களில், நடிகரும் அரசியல்வாதியுமான பரேஷ் ராவல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக டிவிட்டரில் தெரிவித்திருந்தார். தடுப்பூசி போட்டுக்கொண்ட சில நாட்களில் பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Nagma tests positive for covid 19 after taking covid vaccine

Next Story
இவர்தான் இன்ஸ்டாகிராம் இலக்கியாவாம்! பிக் பாஸ் நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்bigg boss fame actress reshma, actress reshma hot dress video, reshma viral video, பிக் பாஸ் புகழ் ரேஷ்மா, ரேஷ்மா வைரல் வீடியோ, ரேஷ்மா, ரேஷ்மா கவர்ச்சி வீடியோ, நெட்டிசன்கள் கம்மெண்ட்ஸ், reshma hot dress, viral video, hot dress, reshma video, netizens comments
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com